பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19

தொட்டில்! தொட்டில்! தொட்டில்!
தொங்கி ஆடும் தொட்டில் !
பட்டுக் குழந்தை தூங்கப்
பாட்டி வாங்கிய தொட்டில் ! 1

பொம்மைக் குழந்தை தூங்கப்
பொம்மை சிரிக்கும் தொட்டில் !
அம்மா ஆட்டும் தொட்டில்!
அழகுத் தொட்டில் ! தொட்டில் ! 2

அக்கா வளர்ந்த தொட்டில் !
அண்ணன் வளர்ந்த தொட்டில் !
செக்கச் சிவந்த தம்பி
சிணுங்கச் சிரிக்கும் தொட்டில் ! 3


38 ♦ கவிஞர் வாணிதாசன்