பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
20

ருவைத் தாளில் தீட்டும்;
உளத்தைத் தாளிற் காட்டும்;
அருமை யான பேச்சின்
ஆழம் அழகைக் காட்டும்! 1

பகையைச் சாய்க்கும் கூர்வாள்;
பலரை ஈர்க்கும் காந்தம்;
நகையை மூட்டும் குழவி;
நலிவைப் போக்கும் தென்றல்! 2

உலகை மாற்றும் மருந்து;
உணர்வை மாற்றும் விருந்து;
கலக மூட்டும் மருந்து;
கவலை போக்கும் மருந்து! 3

அறிவைச் சொல்லும் தந்தை;
அன்பைக் காட்டும் தாயார்;
வெறியை ஊட்டும் காதல்;
வீர மூட்டும் தாறு! 4


குழந்தை இலக்கியம் ♦ 41