பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

வில்லைப் போல இருக்கின்றாய்!
வெளியில் நீரை இறைக்கின்றாய்!
கொல்லை மேடும் கோடையிலே
குளிர்மை அடையும் உன்னாலே!1

ஏரி சுண்டிய காலத்தும்,
இடிமழை குன்றிய காலத்தும்
நீரால் வாழும் உழவர்க்கு
நிமிர்ந்து குனிந்து கொடுக்கின்றாய்!2

உயர்ந்தோர் தாழ்ந்தோர் எண்ணாமல்
உன்னை மிதிப்போர் எண்ணாமல்
முயன்றோர்க் கெல்லாம் தண்ணீரை
மொண்டு மொண்டு கொடுக்கின்றாய்!3

‘ஏற்றம்’ என்று பெயரிட்டார்
ஏற்றம் அடைந்தோர் உன்னாலே!
ஏற்றம் மக்கள் அடையவெனில்
உழவர் இன்னல் களைவோமே!4


குழந்தை இலக்கியம் ♦ 43