பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30

தென்னை ஊஞ்சல் ஆடும்
சின்னக் கிளியே, இந்தா!1

உன்னைப் போல நானும்
ஓடி ஆடி வாழ
என்ன செய்ய வேண்டும்?
எனக்குச் சொல்லு வாயே!2

கோவைப் பழத்தின் சிவப்போ,
குமரி இதழின் சிவப்போ
மேவி விட்ட துன்றன்
மூக்கில்? உண்மை விள்ளே!3

வான வில்லைப் போன்ற
வண்ண மாலை கழுத்தில்
ஏன்அ ணிந்தாய்?பெண்கள்
ஏங்கு தற்குத் தானோ?4


குழந்தை இலக்கியம் ♦ 63