பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாயினைச் சூழ்ந்து மேயும்;
தன்னுடல் வண்ணப் பஞ்சை
ஓயாமற் கோதும்; தாயின்
குரல்கேட்க அருகில் ஒடும்!
நாய்வர உடல்சி லிர்த்துச்
சீறிடும் நற்றாய்க் கோழி!
தாயன்பிற் காரே ஈடு
சாற்றிட வல்லார்? சொல்லீர்! 3

உணர்ச்சியில், அறிவில் இந்த
உலகத்தில் வாழும் ஒவ்வோர்
அணுக்களும் ஒன்றே யாகும்;
அறிந்தவர் அறிவார்! ஆனால்,
பணக்காரன் - ஏழை என்று
வேறாகப் பார்க்கும் மக்கள்
எண்ணத்திற் குஞ்சு - கோழி
இயல்புகள் தோன்றி டாதே! 4


76 ♦ கவிஞர் வாணிதாசன்