பக்கம்:குழந்தை உலகம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. தாய் செய்த தவம்

குழந்தைகளைப் பெறுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று நினைப்பது இந்த நாட்டு வழக்கம், நல்ல அறிவு பெற்ற குழங்தைகளேப் பெறுவதற்குப் பல காலம் தவம் செய்திருக்க வேண்டுமென்றும், அறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் மேலான பாக்கியம் இவ்வுலகத்தில் இல்லையென்றும் தமிழர்கள் நம்பி வந்தார்கள்.

“ பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற ”

என்று திருவள்ளுவர் சொல்கிறார்.

குழந்தையினால் வரும் நற்கதியைப் பற்றி நாம் இப்போது கவலைப்படவேண்டாம். அவர்களால் உண்டாகும் இன்பம் எல்லாச் சாதிக்கும் எல்லா நாட்டுக்கும் பொதுவானது. இந்த நாட்டில் அந்த இன்பத்தைத் தர்ம நினைவோடு சேர்ந்து அனுபவிக்கிறார்கள். அதனால் அதன் மதிப்பு, பின்னும் பல மடங்காகப் பெருகுகிறது.

ஒரு தாய் தன் அருமைக் குழந்தையைத் தாலாட்டுகிறாள். குழந்தை பிறவாமல், தான தர்மம் செய்து, அந்த இலஞ்சியத்தைப் பெற்ற அருமை அவளுக்குத் தெரியும். குழந்தை பெற வேண்டி அவள் செய்த தவம் “மெத்த உண்டு.” அதை அவள் குழந்தையைத் தொட்டிலில் வளரவிட்டுப் பாடும் தாலாட்டிலே சொல்கிறாள்.

குழந்தை அழுகிறது. அதைச் சமாதானப்படுத்தி,“நீ அழுதால் எனக்குக் காரியங்கள் செய்யத் தோன்றுமோ?” என்று கூறித் தொடங்குகிறாள் தாலாட்டை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/15&oldid=1047119" இலிருந்து மீள்விக்கப்பட்டது