பக்கம்:குழந்தை உலகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர் அடித்தார்?

11


ஆரிரரோ!” என்று தாலாட்டை ஆரம்பித்துவிடுகிறாள். கை அசைகிறது; தொட்டில் அசைகிறது. தாயின் நா அசைகிறது; பாட்டு வருகிறது. அந்த மோகன கீத வலையிலே சிக்கிய குழந்தை தன்னை மறந்து தூங்கத் தொடங்குகிறது.

தாய் பாடும் தாலாட்டில் குழந்தையின் அழுகையைப் பற்றிய விசாரணை வருகிறது. விசாரணை வெறும் போலிதான். தாலாட்டுக்குப் பொருத்தமான விஷயம் வேண்டுமே! “குழந்தையை ஆர் அடித்தார்கள்? ” என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள் தாய்.

ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
ஆரடித்து நீஅழறாய் அஞ்சனக்கண் மைகரைய!
கண்ணை அடித்தாரார்? கற்பகத்தைத் தொட்டார்ஆர்?

பாட்டி அடித்திருப்பாளோ! சே சே! அவள் அடிக்க மாட்டாளே. தினந்தோறும் குழநதைக்கு ஆசையோடு பாலூட்டுபவளாயிற்றே. அவளா அடிப்பாள்? அத்தை அடித்தாளோ ? சோற்றைப் பிசைந்து நிலாக் காட்டி, ஊட்டும் அன்புடையவளாயிற்றே! அவள் தன் அமு தூட்டும் கையாலே அடிப்பாளா ?-சரி, மாமன் அடித்தானோ? தனது செல்வ மருமானை மகிழ்த்தெடுக்கும் கையா அடிக்கும் அண்ணன் ? அணைத்தெடுக்கும் கையாலே அவன் அடிக்க நியாயம் இல்லை.

பாட்டி அடித்தாளோ, பால்ஊட்டும் கையாலே?
அத்தை அடித்தாளோ, அமுதூட்டும் கையாலே?
மாமன் அடித்தானோ, மகிழ்ந்தெடுக்கும் கையாலே?
அண்ணன் அடித்தானுே, அணைந்தெடுக்கும் கையாலே!

பின்னே ஆரடித்திருப்பார்கள் ஆராயிருந்தாலும் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/20&oldid=1047192" இலிருந்து மீள்விக்கப்பட்டது