பக்கம்:குழந்தை உலகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

குழந்தை உலகம்

 பற்றி அவள் பேசும் பெருமையோ விரிந்து விரிந்து செல்கிறது.

குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டத் தொடங்குகிறாள்.

ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ
முத்தே பவழமே முக்கனியே சர்க்கரையே
கொத்து மருக்கொழுந்தே கோமளமே கண்வளராய்!
கண்ணே உறங்குறங்கு கண்மணியே நித்திரைசெய்
நித்திரைபோ நித்திரைபோ சித்திரப்பூந் தொட்டிலிலே
கண்ணோன் கண்மணியே கற்பகமே நித்திரையோ
பொன்னே உறங்குறங்கு பூமாத்து வண்டுறங்கு
பொன்னே உறங்குறங்கு புனத்துக் கிளியுறங்கு
கண்ணான கண்ணனுக்குக் கண்ணேறு வாராமல்
சுண்ணும்பும் மஞ்சளுமாய்ச் சுற்றியெறி கண்ணனுக்கு!
வண்ணமணித் தொட்டிலிலே வாய்ந்தசெம்பொற் கட்டிலிலே ::கண்ணோன் கண்மணியே கற்பகமே நித்திரைசெய்!

அந்தத் தொட்டிலே அவசர அவசரமாகச் செய்யச் சொல்லி ஏற்பாடு செய்தவன் யார் தெரியுமா ? குழந்தையின் மாமன். அவன் உணவைக் கூட லட்சியம் செய்யாமல் தன் சின்னஞ்சிறு மருமானுக்கு வேண்டிய பொருள்களைச் சேகரிப்பதில் முனைந்து நிற்கிறான். தாய் சொல்கிறாள்

பச்சை இலுப்பைவெட்டிப் பால்வடியத் தொட்டில்இட்டுத்
தொட்டிலிட்ட அம்மானே-நீ பட்டினியாய்ப் போகாதே !

குழந்தைக்கு ஒரு மாமன்தானா பெரிய மாமன், சின்ன மாமன், நடு மாமன் என்று நாலைந்துபேர்கள் இருக்கறார்கள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு மருமானுக்கு வரிசை செய்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/25&oldid=1047199" இலிருந்து மீள்விக்கப்பட்டது