பக்கம்:குழந்தை உலகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

குழந்தை உலகம்

 உலகத்தையும் குழந்தைக்கு முதல்முதலாகக் காட்டுகிறவள் அவளே. குழந்தைக்குத் தேகப் பயிற்சி உபாத்தியாயராகவும் அவள் விளங்குகிறாள். கைகளை வீசவேண்டுமென்று வெறுமனே சொல்வதில்லை; பாட்டுப் பாடுகிருள்; குழந்தை சூத்திரக் கயிற்றில் ஆடும் பொம்மை போலக் கையை வீசத் தொடங்கி விடுகிறது. அதற்கு, நாம் கையை வீசுகிறோம் என்ற ஞாபகம் இருந்தால், அது வீசாது. அந்த ஞாபகம் வராமல் இருக்கத் தாய் இனிய குரலோடும் தாளத்தோடும் பாட்டைப் பாடுகிறாள். அதன் கைவீச்சே பாட்டுக்குத் தாளமாக அமைகிறது.

கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
சொக்காய் வாங்கலாம் கைவீசு
சொகுசாய்ப் போடலாம் கைவீசு
கோயிலுக்குப் போகலாம் கைவிசு
கும்பிட்டு வரலாம் கைவீசு!

பாட்டின் போக்கிலே தாய் குழங்தைக்குப் புதிய பொருள்களையும் நல்ல பழக்கங்களையும் தெரியப்படுத்துகிறாள்.

இத்தகைய பாடல்கள் தமிழ்நாட்டில் ஊர்கள் தோறும் வழங்குகின்றன. அவ்வவ்விடத்திற்கேற்பப் பாடல்களில் கூடுதலும் குறைவும் மாறுதலும் இருக்கும். கைவீசும் பாடலில் பின்வரும் அடிகளும் அதிகமாக வெவ்வேறு ஊர்களில் வழங்குகின்றன.

முறுக்கு வாங்கலாம் கைவீசு
முடுக்காய்த் தின்னலாம் கைவீசு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/31&oldid=1047397" இலிருந்து மீள்விக்கப்பட்டது