பக்கம்:குழந்தை உலகம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடலும் பாடலும்

23



லட்டு வாங்கலாம் கைவீசு
பிட்டுத் தின்னலாம் கைவீசு
பழங்கள் வாங்கலாம் கைவீசு
பரிந்து புசிக்கலாம் கைவீசு
கம்மல் வாங்கலாம் கைவீசு
காதில் போடலாம் கைவீசு
அப்பம் வாங்கலாம் கைவீசு
அமர்ந்து தின்னலாம் கைவிசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி உண்ணலாம் கைவீசு
தேரைப் பார்க்கலாம் கைவீசு
திரும்பி வரலாம் கைவிசு.

குழந்தையின் தலையைப் பிடித்து ஆட்டும்போது அதற்குத் தலை நொந்ததாகச் சொல்லிப் பாட்டுப் பாடி ஆட்டுவது ஒரு வழக்கம்.

சின்னி தலை நொந்ததே
சின்னம்மா தலை நொந்ததே
பாப்பா தலை நொந்ததே
பாப்பம்மா தலை நொந்ததே !

குழந்தை குதித்து விளையாடுகிறது. தை தையென்று குதிக்கும் குழந்தையின் ஆடலுக்கு ஏற்ற பாடலைத் தாய் பாடுகிறாள்.

தை தை மாணிக்கம் தஞ்சாவூரு மாணிக்கம்
கோவில் சோறு மிஞ்சிப் பூடறது கூத்தாடடி மாணிக்கம்!

குழந்தை முதல் முதலில் “இங், இங்” என்று சப்தம் செய்கிறது. அழுகையின்றிச் செய்யும் அந்தச் சப்தமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/32&oldid=1047400" இலிருந்து மீள்விக்கப்பட்டது