பக்கம்:குழந்தை உலகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

குழந்தை உலகம்


நிலா நிலா எங்கே போனாய்? மணியாங் குளத்துக்கு

மண் எடுக்கப் போனேன்.

மண் எதற்கு ? சொப்புப் பண்ண.
சொப்பு எதற்கு? பணம் போட.
பணம் எதற்கு ? மாடு வாங்க.
மாடு எதற்கு ? சாணி போட.
சாணி எதற்கு? வீடு மெழுக
விடு எதற்கு? பிள்ளை பிறக்க.
பிள்ளை எதற்கு ?
ஒலைப் பாயிலே ஒடி விளையாட
ஈச்சம் பாயிலே இருந்து விளையாட
கோரைப் பாயிலே குதித்து விளையாட
பிடிப்பம் பாயிலே பெரண்டு விளையாட
தாழம் பாயிலே தவழ்ந்து விளையாட
எண்ணெய்க் குடத்திலே துள்ளி விளையாட

வேறுவிதமான பாட்டு ஒன்று வருமாறு:—

அம்புலி அம்மானே ஆடு சித்தப்பா
சோதி பெரியவனே சுக்கல என் தம்பி
எங்கெங்கே போனாய் ?ஆத்தி பறிக்கப் போனேன்
ஆத்தி என்னத்துக்கு ? அம்பி பிறக்க
அம்பி என்னத்துக்கு? ஆத்து மணலிலே சேர்ந்து விளையாட.

இப்படியாக நம் கண் முன்னே நிலாவை வைத்துக் கவிதை செய்கிறார்கள் தமிழ்நாட்டுத் தாயும் குழந்தைகளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/39&oldid=1047460" இலிருந்து மீள்விக்கப்பட்டது