பக்கம்:குழந்தை உலகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுப் பாடல்கள்

39

 இத்தகைய விளையாட்டுக்களுக்கு உரிய பாடல்கள் பரம்பரையாகத் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றன. அவற்றில் தொடர்ச்சியாகப் பொருள் அமையாவிட்டாலும் தாளக் கட்டும், குழந்தைகளின் உள்ளத்தைக் கவரத்தக்க வார்த்தைகளும் அமைந்திருக்கும்.

நாடோடிப் பாடல்களில் தொழில் செய்வார் பாடுவனவற்றிற்கு வரிப் பாட்டு என்ற பெயர் முன்பு வழங்கி வந்ததாகத் தெரிகிறது. ஆட்டமும் பாட்டும் சேர்க்க விளையாடல்களைக் கூத்து வகைகளுள் ஒன்றாகப் பழைய காலத்தில் சேர்த்திருந்தார்கள். பல்வரிக் கூத்து என்ற கூத்து வகையில் தமிழ் காட்டுக் குழந்தைகள் பாடி ஆடும் விளையாடல்கள் பல சேர்ந்திருக்கின்றன.

பாட்டுப் பாடிப் புளியங்கொட்டையையோ, கல்லாங்காயையோ கொந்தி விளையாடும் விளையாட்டைக் கொந்தி என்று பழங்காலத்தில் கூறி வந்தனர். பாண்டியாடுதலைப் பல்வரிக் கூத்தில் ஒன்றாகச் சொல்லியிருக்கிறார்கள். பாம்பாட்டியைப் போலப் பாடி விளையாடுவது ஒருவகை விளையாட்டு. கள்ளுக் குடித்தவனைப் போல நடிப்பது ஒரு கூத்து. கில்லாப் பறண்டி என்று இப்போது வழங்கும் விளையாட்டிற்கு முதலில் உண்டான பெயர் கிள்ளுப் பிருண்டி என்பது. அம்மானை, பந்து, கழங்கு என்பவற்றைப் பெண்கள் பாடி ஆடுவார்கள். அவற்றையும் மேலே சொன்ன பல்வரிக் கூத்தின் வகையாக வகுத்திருக்கிறார்கள். பல்லாங்குழி, தோள் வீசல் என்பனவும் அவ்வினத்தைச் சார்ந்தவையே.

இக்காலத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாத பல வகை விளையாடல்கள் முன் காலத்தில் வழங்கி வந்தன. சிந்து, பிழுக்கை, உடன் சந்தி, ஓர் முலை, கவுசி, குடப் பிழுக்கை, கந்தன் பாட்டு, ஆலங்காட்டாண்டி, பருமணல், நெல்லிச்சி, சூலக் கூத்து, தூண்டில் முதலிய பல பல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/48&oldid=1047678" இலிருந்து மீள்விக்கப்பட்டது