பக்கம்:குழந்தை உலகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விளையாட்டுப் பாடல்கள்

41

 என்பது அப்படி மாறி வழங்குகிறது. எல்லாக் குழந்தைகளும் பிடிபடாமல் தாச்சியைத் தொட்டுவிட்டால் பழைய குழந்தையே மீண்டும் கண்ணுமூச்சி பொத்திக் கொள்ள வேண்டும். யாராவது அதன் கைக்கு அகப்பட்டுவிட்டால் அகப்பட்ட குழந்தை பொத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு விளையாட்டானது தொடர்ச்சியாக கடந்துவரும்.

இந்த விளையாட்டை ஒரு புலவர் தம்முடைய கற்பனைக்கு உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறார். ஒரு பெண்ணின் கண் மிகவும் அகலமானது; காதளவு நீண்டது. அவளைக் கண்ணாமூச்சி பொத்த அழைத்த தாச்சியால் அவள் கண் முழுதையும் பொத்த முடியவில்லை. எப்படிப் பொத்தினாலும் கடைக் கண்ணுலே பார்க்கக் கூடிய இடைவெளி இருக்கிறதாம். அதனால், விரைவிலே குழந்தைகளைப் பிடிக்கும் நிலை அந்தப் பெண்ணுக்கு அமைந்துவிடுகிறது. இதைக்கண்டு தாச்சி தரும சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறாளாம். இப்படி அவர் வருணித்திருக்கிறார்.

***

தளர் நடையிடும் பருவத்துக் குழந்தைகளுக்கு இன்பம் ஊட்டும் தென்ன மர விளையாட்டு ஒன்று உண்டு.

தாயோ, தகப்பனரோ வேறு யாரேனும் பெரியவரோ மல்லாக்காகப் படுத்துக்கொண்டு காலை மடக்கிச் சற்றே தூக்குவார்கள்.குழந்தையின் கால்களைத் தம் புறங்கால்களின் மேல் வைத்து அதன் கைகளைத் தம் கைகளால் பற்றிக் கொண்டு மெதுவாகக் காலை ஆட்டுவார்கள், குழந்தை மேலும் கீழும் எழும்பி இறங்கும். வில் கட்டிலில் மேலும் கீழும் அசைவு ஏற்படுவது போல் இருப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/50&oldid=1047685" இலிருந்து மீள்விக்கப்பட்டது