பக்கம்:குழந்தை உலகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

குழந்தை உலகம்



அஞ்சு : கல்லாலின் அடியிருக்கும்
கடவுளுக்கு முடிக்கொழுந்து அஞ்சு.
ஆறு : தேவரெலாம் நீராடச்
சேருவது பொன்முகலி ஆறு.
ஏழு : சிலந்தி முன்னே பூசிக்கச்
சேவடிபூ சித்தவர்கள் ஏழு.

இப்படி வருகின்ற ஏதோ ஒரு பாட்டைப் பாடி உற்சாகத்தோடு கழங்காடுகின்றாள். முத்துக் கழங்கும், நீலமணிக்கழங்கும், பவழக்கழங்கும், வயிரக்கழங்கும், பத்மராகக்கழங்கும், பொற்கழங்கும் மரகதக்கழங்குமாக ஏழு கழங்குகளே அவள் ஆடுவதாகப் புலவர் சொல்கிறார். புலவர் வாக்கையே பார்க்கலாம்.

மூரல் ஒளிவீசும் முத்தின் பருங்கழங்கும்
காரகை நீலக் கருங்கழங்கும்—ஆரமுதச்
சேமஇத ழைப்போற் சிவந்தபவ ழக்கழங்கும்
காமர் உதிர்வயிரக் கற்கழங்கும்—தாமமலர்க்
கைச்செம் பதுமரா கக்கழங்கும் பொற்கழங்கும்
பச்சை மயிலியலின் பைங்கழங்கும்—மெச்சஎடுத்
தொன்றென் றுலகமெலாம் ஒன்றாய் ஒடுங்கிவிடும்
அன்றுமுள கல்லால் அடிபாடி—நன்றென்று
இரண்டென் றெழிலடியார் ஈடேற நல்கும்
பரந்தஇரு பாதங்கள் பாடி—நிரந்தரமும்
மூன்றென்று மூன்று முதலிகளும் தாம்புகழும்
சான்ற சுருதித் தமிழ்பாடி—ஆன்றவொரு
நாலென்று மாசிமகம் நாடோறும் தெண்டனிடு
மூல மறையின் முடிபாடிச்—சாலவே
அஞ்சென்று கல்லால் அடியிற் கரும்பினுயர்
அஞ்சு கொழுந்தின் அடிபாடி—நெஞ்சுருகி
ஆறென்று நாளும் அமரர்புகுந் தாருடி
நீறணியும் பொன்முகரி நீர்பாடி—வீறுடனே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/55&oldid=1048094" இலிருந்து மீள்விக்கப்பட்டது