பக்கம்:குழந்தை உலகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்லாங்காய் விளையாட்டு

47



ஏழென்று முன்சிலந்தி எய்தொளியைப் பின்கூடி
வாழும் எழுவர் வளம்பாடிக்—கேழில்
மிசையேழும் ஆட விழிபாட நாவில்
இசையேழும் ஆட இருந்தாள்.

பெதும்பைப் பருவத்துப் பெண்கள் இப்படியே கழங்கு விளையாடுவதாகவும், அப்போது தம்முடைய ஊரில் உள்ள கடவுளைத் துதித்து ஒன்று முதல் ஏழுவரையில் எண்ணிக்கை வரும்படியான பாடல்களைப் பாடுவதாகவும் வேறு புலவர்களும் பிற உலாக்களில் அமைத்திருக்கிறார்கள்.

இந்த ஆட்டமும் பாட்டும் தமிழ்நாட்டு வழக்கத்தைப் பின்பற்றி அமைத்துக்கொண்டனவே ஆகும்.

2

உலா என்னும் பிரபந்தங்களில் பெதும்பைப் பருவப் பெண் ஏழு கழங்குகளைவைத்துப் பாடி ஆடுவதாகப் புலவர்கள் சொல்லியிருக்கும் செய்திக்கு மூலம் நாடோடிப் பாடலேயாகும். தமிழ்நாட்டில் சிறுமியர் வீட்டுக்குள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில் கல்லாங்காய் விளையாட்டும் ஒன்று. ஏழு கூழாங்கற்களே வைத்துக் கொண்டு அவர்கள் விளையாடுவார்கள்.

ஒன்று, இரண்டு என்று எண்ணிக்கைகள் வரும்படியான பாடல்களே இந்த விளையாட்டிலே பாடுவார்கள். ஒவ்வோரடிக்கும் பொருளிலே சம்பந்தம் இராது. ஆனாலும் ஒருவகை ஓசை நயமும் எண்களின் பெயரும் தவறாமல் பாட்டிலேயிருக்கும். ஏழுவரைக்கும் எண் தோற்றும் படியாகத் திருவெழு கூற்றிருக்கை என்ற ஒரு வகைப் பிரபங்தம் தமிழில் உண்டு.

ஒன்று இரண்டு என்று எண்களின் பெயர்கள் முழுவதும் அப்படியே பாட்டில் அமைந்திருப்பதில்லை. எண்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/56&oldid=1048098" இலிருந்து மீள்விக்கப்பட்டது