பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

குழந்தை எப்படிப் பிறக்கிறது?


பாப்பா:-நடுவேஒரு தண்டு மாதிரி அழகாக இருக் கிறது. அப்பா:-அதை நீக்கி விடுகிறேன். அதனடியில் சிறு குமிழ் போலிருக்கிறது பார். அதை இப்போழுது கீறு கிறேன். அதனுள் என்ன இருக்கிறது? பாப்பா:-அப்பா! வெள்ளையாகக் கடுகு மாதிரி இருக் கின்றனவே, அவை என்ன? அப்பா - அம்மா! அவைகளை முட்டைகள் என்று சொல்லுவார்கள். அந்த முட்டைகள் வளர்ந்துதான் 2 விதைகள் ஆகின்றன. இதே மாதிரிதான் 3. எல்லாச் செடியின் பூக்களிலும் மரங்களின் பூக்களிலும் நடுவில் ஒரு தண்டிருக்கும், அதன '1 டியில் முட்டைகளிருக்கும். அந்த முட்டைகள் தான் விதைகள் ஆகின்றன. அந்த விதைகள் முளைத்துத் தான் செடிகளும் மரங் 4 களும் ஆகின்றன. பாப்பா :- இதெல்லாம் எவ்வளவு ஆச் பூவரசம்பூத் சரியமா யிருக்கின்றன. எனக்குக் கேட்கக் శీర్థి கேட்க ஆசையாயிருக்கிறது. 2, 3, கீலாக் அப்பா :-ஆமாம், அம்மா! இன்னும் :: பார் கோழி முட்டையிடுகிறதே. அதுவும் :: அவ்வளவு பருமனக திடீரென்று கோழி டைன், வயிற்றில் உண்டாய் விடுவதில்லை. கோழி * வயிற்றில் ஒரு சிறு பை உண்டு. அதில் பூவில் இருக்கிற மாதிரி சிறு சிறு முட்டைகள் இருக்கும். அவைதான் ஒவ்வொன்ருகப் பருத்து வெளியே வருகின்றன. பாப்பா:-அப்படியானல், நம்முடைய பசு கன்றுக் குட்டி போட்டிருக்கிறதே, அந்தக் கன்றுக் குட்டியும் பசுவின் வயிற்றில் சிறு முட்டையாயிருந்து தான் பிறகு பெரியதாக வளர்ந்து பிறந்ததோ?