பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

13

பாப்பா:— அப்பா! அம்மா வயிற்றில் முட்டைப்பைகள் இருக்கிறதாகச் சொல்லுகிருயே, அவைகளில் எத்தனை முட்டைகள் இருக்கும்?

அப்பா:— அம்மா வயிற்றில் இரண்டு முட்டைப்பைகள் இருக்கின்றன.

பாப்பா:— அப்பா! இரண்டு பைகள் எதற்கு? ஒன்று போதாதா?

அப்பா:— அம்மா, நமக்குக் கண்கள் , காதுகள், கைகள் கால்கள், எல்லாம் இரண்டு இரண்டாக இருக்கின்றனவே, ஏன் தெரியுமா? ஒன்று கெட்டுப்போனல் மற்றொன்றைக் கொண்டேனும் காரியங்களைச் செய்து கொள்ளலாம் அல்லவா? அதற்காகத் தான்.

பாப்பா:— அதே காரணத்துக்காகத்தான் அம்மா வயிற்றிலும் முட்டைப் பைகள் இரண்டாக இருக்கின்றனவோ, அப்பா!

அப்பா:— ஆம், அம்மா! அதற்காகத்தான்.

பாப்பா:-அது சரி, அப்பா! அந்தப் பைகளில் எத்தனை முட்டைகள் இருக்கும் அப்பா?

அப்பா:— ஆயிரக்கணக்கான முட்டைகள் இருக்கும் அம்மா! டாக்டர்கள் 30 ஆயிரம் என்று கூடக்கணக்குச் சொல்லுகிருர்கள் அம்மா!

பாப்பா:— அப்படியானல் அம்மா வயிற்றிலிருந்து அடிக்கடி தங்கச்சிகளும் தம்பிகளும்௧ பிறக்கவில்லையே,ஏன்?

அப்பா:— அம்மா! அது ஏன் என்று சொல்லுகிறேன் கேள். அம்மா மாலையில் குத்துவிளக்கு ஏற்றுவதைப் பார்த்திருக்கிருய் அல்லவா? அப்பொழுது அம்மா என்ன செய்கிருள்?

பாப்பா:— அப்பா! குத்துவிளக்கில் முதலில் எண்-