பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

தெரியாத சிறு முட்டைகள் பெரிய முட்டைகளாக ஆகிவெளியேயிடும்படி செய்வதற்காகவே சேவற் கோழி இப்படி மேலே ஏறிக் கொத்துகிறது.

பாப்பா:- அப்பா! நீ சொல்வது ஒன்றும் விளங்க வில்லையே! சேவற் கோழி பெட்டைக் கோழியின் மேலே ஏறினல் பெட்டைக் கோழியின் வயிற்றிலுள்ள சிறு முட்டைகள் பெரிய முட்டைகள் ஆய்விடுமா, அது எப்படி அப்பா?

அப்பா:- அம்மா! சேவற் கோழி பெட்டைக் கோழியின் மேலே ஏறியதும் சேவற் கோழியின் வாலின் அடியிலுள்ள ஒரு சிறு துவாரமானது, பெட்டைக் கோழி முட்டையிடுவதற்காக அதன் வாலின் அடியில் ஒரு சிறு துவாரமிருக்கிறதாகக் கூறினேனே, அந்தத்துவாரத்துடன் ஒட்டும். அப்பொழுது சேவற்கோழியின் ஒருவித நீர்-அதுதான் ஆண் தாது அது பெட்டைக் கோழியின் வயிற்றுக்குள்ளே சென்று அங்குள்ள சிறு முட்டைகளுடன் சேரும், இப்படி. ஆண் தாது பெண் முட்டையுடன் சேர்ந்ததும் அந்த முட்டைகள் பெரிய முட்டைகளாக ஆக ஆரம்பித்து விடும். பிறகு சில நாட்களுக்குப் பின் பெட்டைக் கோழி பெரிய வெண்ணிறமான முட்டைகளை இடும், அவற்றின் மேல் உட்கார்ந்து அடை காக்கும், மூன்று வாரங்கள் சென்றதும் முட்டைகள் வெடித்து குஞ்சுகள் வரும். இதே மாதிரியில்தான் சகல பட்சிகளிலும் பெண் முட்டையுடன் ஆண் தாது சேர்ந்துதான் முட்டைகளும் உண்டாகின்றன. ஆண் தாது சேராவிட்டால் பெண் முட்டைகள பலன் பெறாமல் அழிந்து போகும். அதனால்தான் பெட்டைக் கோழி வளர்ப்பவர்கள் ஒரு சேவலையும் கூடவே வளர்ப்பார்கள். சேவல் இல்லையானால் பெட்டைக் கோழிகளின் வயிற்றிலுள்ள சிறு முட்டைகள் பெரிய முட்டைகள் ஆகாமல் அழிந்து போய்க் கொண்டேயிருக்கும். கோழிவளர்ப்பவர்களுக்கு முட்டைகள் கிடைக்க மாட்டா.