பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

21

பாப்பா:- அப்பா! அப்படியானல் மிருகங்கள் குட்டி போடுகின்றனவே, அவைகளுக்கும் ஆண் தாது பெண் முட்டையுடன் சேரத்தான் வேண்டுமோ?

அப்பா:- ஆம், அம்மா! அவைகளுக்கும் அப்படித்தான் அம்மா! சில வேளைகளில் காளை மாடுகள் பசுக்களின் மேல் முன்கால்களைத் துக்கிப் போடுவதைப் பார்த்திருக்கிருயா?

பாப்பா:- ஆமாம், அப்பா! அப்பொழுது அவைகளைப் பார்க்க எனக்கு அதிக பயமாயிருக்கும். காளைமாடு எவ்வளவு பெரியது, அது கால்களைத் துாக்கிப் பசுவின் முதுகின்மேல் போட்டால் பயமாயிராதா, அப்பா?

அப்பா:-ஆம், அம்மா! பயமாகத்தான் இருக்கும். அவைகள் அருகில் நீ போகக் கூடாது அம்மா! அப்படிக் காளை மாடு பசுவின் மேலே காலைத் தூக்கிப் போடுவதும் தன்னிடமுள்ள ஆண் தாதுவைப்பசுவின் முட்டைப் பையிலுள்ள சின்னஞ் சிறுமுட்டைகளுடன் சேரும்படி செய்வதற்காகவே.

பாப்பா:- அப்பா, அது எப்படிச் சேர்க்கும்? சேவற் கோழிக்கும் பெட்டைக் கோழிக்கும் வாலுக்கடியில் சிறு துவாரங்கள் இருப்பதாகச் சொன்னயே, அதுமாதிரி காளை மாட்டுக்கும் பசு மாட்டுக்கும் இருக்கிறதோ அப்பா!

அப்பா:- அம்மா! பசு மாட்டின் வாலினடியில் இரண்டு துவாரங்கள் இருக்கின்றன. ஒன்று சாணமிடுந் துவாரம்; மற்ருென்றின் வழியாகத்தான் மூத்திரம் பெய்யும். ஆனால் அந்தத் துவாரத்தின் அருகிலேயே வேறு ஒரு துவாரம் உண்டு. காளை மாட்டின் வாலடியில் சாணத் துவாரந்தான் உண்டு. ஆனால், அடிவயிற்றில் பின் கால்களின் பக்கத்தில் ஒரு சிறு குழாய் இருக்கிறது. காளை மாடு பசு மாட்டின்மேலே காலைப் போடும்பொழுது இந்தக் குழாய் பசு மாட்டின் மூத்திரத் துவாரத்தின் பக்கத்திலுள்ள துவாரத்தில் புகுந்துவிடும். அப்பொழுது காளை மாட்டின் அடிவயிற்றில் தொங்கும் பீஜங்களிலிருந்து ஆண் தாதுவானது அந்தக்குழாய் வழியாகப் பசுவின்