பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

உடம்பில் சென்று அங்குள்ள சிறு முட்டையுடன் சேர்ந்து விடும். அப்புறம் அந்த முட்டை கர்ப்பப்பைக்கு வந்து அங்கு தங்கி கன்றுக் குட்டியாக வளரும். இதே மாதிரிதான் எல்லா மிருகங்களிலும் ஆண் தாது பெண் முட்டையுடன் சேர்ந்து அதைக் குட்டியாக வளரும்படி செய்கிறது. அப்படி ஆண் தாது பெண்முட்டையுடன் சேராவிட்டால் பெண் முட்டையானது குட்டியாகாமல் அழிந்து போகும்

பாப்பா:— அப்பா! மனிதர்கள் விஷயமும் இதே மாதிரித்தானே?

அப்பா:— ஆம், அம்மா, அதே மாதிரித்தான், சந்தேகமில்லை. ஆனால் ஒரு சிறு வித்தியாசம் மட்டுமே உண்டு அப்பாவிடமுள்ள ஆண் தாது அப்பாவினுடைய பீஜத்திலேயே உண்டாகின்றது, அந்தத் தாது அப்பாவின் மூத்திரக் குழாய் வழியாகவே அம்மாவுடைய மூத்திரத் தோடு உள்ள ஒரு குழாய்க்குள் போய்ச் சேர்ந்து அம்மாவின் முட்டை பயிலிருந்துவரும் சிறு முட்டையுடன் கலந்து பின் கர்ப்பப் பையில் தங்கிக் குழந்தை ஆகின்றது. இப்படி ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேர்வதற்கு அம்மாவும் அப்பாவும் ஒருவரைப் பார்த்து ஒருவர் படுத்துக் கொண்டால் போதுமானது, இது ஒன்று தான் வித்தியாசம். இப்படி ஆண் தாது பெண் முட்டையுடன் சேர்ந்துதான் அம்மா வயிற்றுக்குள் நீயும் உண்டானுய், தங்கச்சியும் உண்டாளுள்.

பாப்பா:— அப்படியானல் ஏன் அப்பா! அடிக்கடி ஆண் தாது பெண் முட்டையுடன் சேரக்கூடாது. அடிக்கடி சேர்ந்தால் அடிக்கடி தங்கச்சி பிறந்துகொண்டிருப்பாள் அல்லவா! அப்பொழுது எனக்கு எத்தனை சின்னத் தங்கச்சிகள் இருப்பார்கள், எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்!

அப்பா:- ஆம் அம்மா! ஒவ்வொரு பூவிலும் ஆண் தாதாகிய மகரந்தப்பொடி சூல் வயிற்றிலுள்ள பெண் முட்டையுடன் சேருமாகில் நமக்கு ஏராளமான காய்களும் கனிகளும் கிடைக்கும். ஆனால் எல்லாப் பூக்களிலும் மகரந்தம் கீலாக்ரகத்தில் விழாமற் போய்விடுவதுண்டு: