பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ஆ. சி ரி ய ர் முகவுரை அன்பார்ந்த குழந்தைகளே! உங்களுக்கு இந்தப் புஸ்தகத்தை சந்தோஷத்துடன் அளிக்கிறேன். நீங்கள் குழந் தைகள். குழந்தைப் பருவம் மிகவும் முக்கியமானது. அந்தப் பருவத்தில்தான் உங்களுடைய உடலைப் போலவே உங்களு டைய அறிவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக வளர்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் காலையில் கண் விழித்ததுமுதல் இரவில் உறங்கும் வரை ஒரு நிமிஷ மாவது சும்மா இருக்கிறீர்களா? உங்கள் கைகள் எதை யேனும் செய்து கொண்டிருக்கும். உங்கள் கண்கள் எதை யேனும் கவனித்துக் கொண்டிருக்கும். உங்களுக்குச் சந்தே கங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். எதைக் கண் டாலும் இது ஏன் உண்டாயிற்று, எப்படி உண்டாயிற்று என்று உங்கள் மனத்தில் கேள்விகள் உதித்துக்கொண்டே இருக்கும். அவற்றை உங்கள் அப்பா அம்மா விடமாவது, அவர்கள் அருகில் இல்லா விட்டால் அருகிலுள்ள வேறு யாரிடமாவது கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். இப்படிக் கேள்விகள் கேட்டுக் கேட்டு உங்கள் அறிவை வளர்த்து வருகிறீர்கள். இந்த மாதிரிதான் என்னுடைய குழந்தைகளும் என்னிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருக்கிரு.ர்கள். நேற்று மழை பெய்தது. உடனே என் பெண் குழந்தை ஓடிவந்து அப்பா! மழை பெய்தால் குளிருதே, அது ஏன்? அப்பா! என்று கேட்டாள். | இந்த மாதிரி இவர்கள் கேட்கும் கேள்விகளையும் அவை களுக்கு நான் கூறிய பதில்களையும் சேர்த்து 'குழந்தைகள் கேள்வியும் பதிலும் என்றும் 'அப்பாவும் மகனும்’ ’ என்றும் இரண்டு நூல்கள் அச்சிட்டிருக்கின்றேன். என்னுடைய பெண் குழந்தைக்குப் பத்து வயது. அவளுக்குச் சில மாதங்கட்கு முன் ஒரு தங்கச்சி பிறந்தாள்.