பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

அவளே வளர்த்து வந்தது என்று கூறினேனே, ஞாபகமிருக்கிறதா?

பாப்பா:- ஆமாம் அப்பா! அதற்கும் தொப்பூழுக்கும் என்ன சம்பந்தம் அப்பா?

அப்பா:- அம்மா! தங்கச்சிக்கு ரத்தம் எப்படிப் போயிற்று என்று சொல்லு பார்ப்போம்.

பாப்பா:- அது எப்படிப் போயிற்று அப்பா? தங்கச்சி வேறு, அம்மா வேறுதானே. எப்படி அம்மாவின் ரத்தம் தங்கச்சிக்குப் போகும்? தங்கச்சி அம்மாவின் ரத்தத்தைக் குடிக்க முடியுமா அப்பா?

அப்பா:- அம்மா! அது முடியாது. ஆனால் தங்கச்சியின் வயிற்றிலும் உன்னுடைய வயிற்றிலும் தொப்பூழ் இருக்கிறதே. அது அம்மா வயிற்றிலிருக்கும்பொழுது இவ்வளவு சிறியதாக இராது. கொடிபோல் நீளமாக இருக்கும். அம்மாவின் கர்ப்பப் பையுடன் சேர்ந்திருக்கும் , அதன் வழியாகத்தான் தங்கச்சிக்கு அம்மாவின் ரத்தம் போய்க்கொண்டிருந்தது. இப்பொழுது தெரிகிறதா? அம்மா!

பாப்பா:- அப்பா! அது தெரிகிறது. ஆனால் அதை இப்பொழுது காணமே அப்பா, அது எங்கே?

அப்பா:- அம்மா! தங்கச்சி பிறந்ததும் அதை டாக்டர் கத்திரித்துவிட்டு மருந்துபோட்டுக் கட்டிவிடுவார்.

பாப்பா:- அப்பா! இது என்ன அணியாயம். அப்படிச்செய்தால் தங்கச்சிக்கு வலிக்காதா?

அப்பா:- கத்திரிக்கும்பொழுது வலிக்கத்தான் செய்யும். ஆனால் மருந்து போட்டால் பிறகு வலிக்காது.

பாப்பா:- அப்பா! அதை ஏன் கத்திரிக்கிறாா்ள்க? அது தங்கச்சிக்கு வேண்டாமா?