பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

47

அப்பா:— ஆம், அம்மா , ஒரு குழந்தை தான் உண்டாகும்.

பாப்பா:— அப்படியானல் ஏன் ஒரு ஆண் உயிர் மட்டும் உள்ளே போக வேண்டும். இரண்டு மூன்று போனால் என்ன?

அப்பா:— அம்மா! நீ கோழி முட்டை பார்த்திருக்கிருயா?

பாப்பா:— ஆமாம் அப்பா, அது வெள்ளையாகப் பளபள வென்றிருக்கிறது.

அப்பா:— அம்மா, அதை உடைத்தால் அதில் வெள்ளையாக வழவழ என்று இருக்கிறது. அத்துடன் மஞ்சள் நிறமாக ஏதோ உருண்டை மாதிரி ஒன்று தோன்றுகிறது.

அப்பா:— ஆமாம், அதைத்தான் மஞ்சள்க்கரு என்று கூறுவார்கள். அதுதான் குஞ்சாக வளர்கிறது.

பாப்பா:— அப்படியானால் வெள்ளையாக இருக்கிறதே, அது எதற்கு அப்பா?

அப்பா:— அம்மா! மஞ்சள்க்கரு குஞ்சாக வளரும் பொழுது அதற்கு ஆகாரம் வேண்டாமா? தங்கச்சி அம்மா வயிற்றுக்குள் இருப்பதால் அவளுக்கு அம்மாவின் ரத்தம் கிடைக்கிறது. ஆனால் முட்டை வெளியில் இருப்பதால் அதற்குப் பெட்டை கோழியின் ரத்தம் கிடைக்க முடியுமா?

பாப்பா:— கிடைக்க முடியாது. அதற்காகத்தான் அந்த வெள்ளைக் கருவோ? அதுதான் முட்டைக்குள் உண்டாகும் குஞ்சுக்கு ஆதாரமோ அப்பா?

அப்பா:-—ஆம் அம்மா! முட்டைக்குள்ளிருக்கும் மஞ்சள்க்கருத்தான் குஞ்சாகிறது என்று சொன்னேன் அல்லவா? அதேமாதிரிதான் அம்மா வயிற்றில் உண்டாகும் முட்டையிலும் இரண்டு கரு உண்டு. ஒன்று குழந்தையாகும். ஒன்று அது கர்ப்பப்பைக்கு வந்து சேரும் வரை அதற்கு ஆகாரமாயிருக்கும்.