பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:- அப்பா! நான் இதுவா கேட்டேன்? இரண்டு மூன்று ஆண் உயிர்கள் அம்மாவின் முட்டைக்குள் போகக் கூடாதா? போய் இரண்டு மூன்று குழந்தைகளை உண்டாக்கக் கூடாதா என்றல்லவா கேட்டேன்?

அப்பா:- ஆம் அம்மா அதைத்தான் கேட்டாய். அதைத் தான் நானும் சொல்லப்போகிறேன். அம்மா! கேள். அம்மாவினுடைய வயிற்றில் ஒரு சமயத்தில் ஒரு முட்டை விளைந்து பக்குவமாகும் என்று சொன்னது ஞாபகமிருக்கிறதா?

பாப்பா:- ஆம், அப்பா.

அப்பா:- அந்த முட்டையில் குழந்தை உண்டாகும் கர்ப்பமாக சாதாரணமாக ஒன்றே ஒன்றுதாணிருக்கும். ஆனால் சில சமயங்களில் அபூர்வமாக இரண்டு இருந்து விடும். ஒன்று மட்டுமிருந்தால் அந்த முட்டை ஒரு ஆண் உயிர் உள்ளே வந்ததும் மற்ற உயிர்களுக்கு இடம் கொடாமல் மூடிக்கொள்ளும். ஆனால் இரண்டு கருப்பாகங்கள் இருந்துவிட்டால் அப்பொழுது அது இரண்டு ஆண் உயிர்கள் உள்ளே வருவதற்கு இடங்கொடுக்கும். அந்தச் சமயத்தில்தான் இரண்டு குழந்தைகள் ஒரே சமயத்தில் பிறக்கும்.

பாப்பா:- ஆனால் அப்பா! நாயும் குட்டிகள் போடுகின்றனவே!

அப்பா:- ஆம், பூனை 3 முதல் ஆறு குட்டிகளும் நாய் 3 முதல் 8 குட்டிகளும் போடும் அம்மா! அது அவைகளுக்கு இயற்கை ஆட்டைப் பார், அதுவும் இரண்டு மூன்று குட்டிகள் போடும். பன்றி பார்த்திருக்கிருயா. அது பத்துப் பன்னிரண்டு குட்டிகள் போடும். ஆனால் பசு, குதிரை, யானை முதலிய பெரிய மிருகங்கள் எல்லாம் ஒரு சமயத்தில் ஒரு குட்டிதான் போடும்.

பாப்பா:- அப்பா! அது தெரிகிறது. ஆனால் அம்மா