பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

49

பாப்பா:- அப்படியானல் ஆண் பெண் உண்டாவது பெண் முட்டையினல் இல்லை, ஆண் உயிரினல்தான் என்று எண்ணுகிறேன், அப்பா.

அப்பா:- அப்படித்தான் அம்மா. நீ கெட்டிக்காரி. கண்டு பிடித்து விட்டாயே!

பாப்பா:- என்ன அப்பா, ஆண் உயிர்களில்தானே கம்பிகள் வித்தியாசமாக இருப்பதாகச் சொன்னுய்?

அப்பா:- ஆம், அம்மா. பெண் முட்டையுடன் பதினாறு கம்பிகள் உள்ள ஆண் உயிர் சேர்ந்தால் ஆண் குழந்தை உண்டாகும். பன்னிரண்டு கம்பிகள் உள்ள ஆண் உயிர் சேர்ந்தால் பெண் குழந்தை உண்டாகும்.

பாப்பா:- அப்பா, அது ஏன் அப்படிச் சிலசமயம் பதினொன்று உள்ளதும் சில சமயம் பன்னிரண்டு உள்ளதும் சேர்கின்றன?

அப்பா:- அதை ஏன் என்று சொல்ல முடியாது அம்மா! இரண்டுவிதமான உயிர்களும் உள்ளே போகின்றன. அவைகளில் எந்த உயிர் முட்டைக்குள் போகும் என்று முன் கூட்டிச் சொல்வது எப்படி?

பாப்பா:- அப்படியானால் தங்கச்சி பிறப்பதற்கு முன்னால் உனக்கும் அம்மாவுக்கும் பிறக்கப் போவது தங்கச்சியா தம்யியா என்று தெரியாதோ, அப்பா?

அப்பா:- அது எப்படித் தெரிய முடியும்?

பாப்பா:- கர்ப்பம் உண்டாகி ஆறு வாரம் ஆகும் பொழுது ஆண் பெண் என்ற வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும் என்று முன்னல் சொன்னயே அப்பா?

அப்பா:- ஆம், அம்மா! அது டாக்டர்கள் இறந்து போன தாய்மார்களின் வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்து அறிந்துகொண்ட விஷயம். ஆனால் அம்மா வயிற்றுக்குள் இருக்கும்பொழுது அதை அறிய முடியாதம்மா? குழந்தை பிறந்த பிறகுதான் ஆண் பெண்ணா என்று அறிய முடியும்.

கு-4