பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

53

பாப்பா:- ஆம் , அப்பா! அப்படியானால் நாம் மரத்திலுள்ள ஒரு மொட்டை விரித்து அந்த மரத்தில் விரிந்திருக்கும் ஒரு பூவின் மகரந்தத்தை எடுத்து மொட்டின் கீலாக்ரகத்தின் மீது வைத்தால் காய் உண்டாகலாம் அல்லவா?

அப்பா:- அப்பொழுதும் உண்டாகாது. நாம் மகரந்தப் பொடியை மொட்டின் கீலாக்ரகத்தின்மீது வைக்கலாம்; ஆனால் அதை இறுக்கிப் பிடித்துக் கொள்ள அந்த விளையாத கீலாக்ரகத்தில் பசை நீர் உண்டாவதில்லை. அதனால் நாம் வைக்கும் மகரந்தப் பொடி கீலத்தினுாடே இறங்காமல் காற்றில் சிதறிப் போகும்,

பாப்பா:- அப்பா! இப்பொழுது எனக்குத் தெரிகிறது. விரிந்த பூவில் மகரந்தப் பொடி முட்டையுடன் கலந்து காயும் விதையும் உண்டாகிறது. மொட்டிலோ அவை சேர்வதுமில்லை, அதனல் காய் உண்டாவது மில்லை.

அப்பா:- அம்மா! சேவற்கோழி பெட்டைக் கோழியின் மீது ஏறுவதைப் பார்த்திருக்கிறாயே, அதுபோல் ஒரு குஞ்சு மற்றொரு குஞ்சின்மீது ஏறுவதைப் பார்த்திருக்கிறாயா?

பாப்பா:- இல்லை, அப்பா! அது ஏன் அப்படி?

அப்பா:- அம்மா! சேவலிடம்தான் ஆண் தாது விளைந்திருக்கும்: சேவற் குஞ்சிடம் விளைந்திராது, அதே மாதிரி பெட்டைக் கோழியிடம்தான் பெண் தாது விளைந்திருக்கும், பெட்டைக் குஞ்சிடம் விளைந்திராது.

பாப்பா:- அதனால்தான் ஒரு குஞ்சு மற்றோரு குஞ்சின் மீது ஏறுவதில்லையோ, அப்பா!

அப்பா:- ஆம், அம்மா! அதுதான் காரணம் அப்படியே ஒருவேளை ஏறினலும் அவற்றின் வாலினடியேயுள்ள துவாரங்கள் பொருந்தமாட்டா. பொருந்தினாலும் ஆண் தாது பெட்டைக் கோழியினுள் சென்று பெண் தாதுவுடன் கலந்து முட்டையாகாது.