பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

குழந்தை எப்படி பிறக்கிறது

பாப்பா:- ஆகவே, ஆண் தாதுவும் பெண் தாதுவும் விளைந்தால்தான் ஒன்றாகச்சேர முடியுமோ?

அப்பா:- ஆம், அம்மா! அந்த மாதிரியேதான் சிறுவர்களிடத்தில் ஆண் தாதுவும் சிறுமிகளிடத்தில் பெண் தாதுவும் விளைந்து பருவமடையாமல் இருக்கின்றன. அதே மாதிரிதான் ஆண் தாதுவை பெண்ணின் உடம்பில் சேர்க்கும் உறுப்பும் அப்படிச்சேர்க்கும் ஆண் தாதுவை வாங்கிப்பெண் தாதுவுள்ள இடத்துக்கு அனுப்பும் பெண் உறுப்பும் வளர்ந்து பருவம் அடையாமல் இருக்கின்றன. இந்தக் காரணத்தால்தான் அம்மா! உன்னுடைய உடம்பில் பெண் தாது இருந்தாலும் ஆண் தாதுவோடு சேர்ந்து குழந்தை உண்டாகாது என்று சொன்னேன்.

பாப்பா:- அப்படியானல் ஆண் தாதுவும் பெண் தாதுவும் எப்பொழுதுதான் பருவமடையும் அப்பா!

அப்பா:- சிறுவர்களாயும் சிறுமிகளாயும் இருக்கும் பொழுது ஆண் தாதுவும் பெண் தாதுவும் கொஞ்சங்கொஞ்சமாக விளைந்துகொண்டே இருக்கும். ஆண் தாது ஆணுக்கு 16-20 வயதாகும்பொழுதும் பெண் தாது பெண்ணுக்கு 13-14 வயதாகும்பொழுதுமே பருவம் அடையும்.

பாப்பா:- அப்பா! அதற்குப் பிறகுதான் ஆண் தாதுவும் பெண் தாதுவும் சேர முடியுமோ? அப்பொழுது தான் குழந்தை உண்டாகுமோ?

அப்பா:- ஆம், அம்மா! ஆனால் பூவரசமரத்தில் எத்தனையோ பூக்கள் பூக்கின்றனவே, அவைகளில் எல்லாம் காய் உண்டாகிறதா?

பாப்பா:- இல்லை, அப்பா! அநேக பூக்கள் காயாமலே உதிர்ந்து விடுகின்றன. அதற்குக் காரணம் என்ன அப்பா!

அப்பா:- அம்மா, அந்த மாதிரிப் பூத்தும் காயாகாமல் உதிரும் பூக்களில் மகரந்தப் பொடியும், சூல் முட்டையும்