பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

55

ஒரு அளவு விளைந்திருந்தாலும், காயாகும்படியான நல்ல வளர்ச்சி அடைவதில்லை. அதனால் தான் அந்த இரண்டும் சேர்ந்து காயும் விதையும் உண்டாவதில்லை. அம்மா, இன்னும் பார்! ஒரே மரத்தில் சில காய்கள் பெரியதாகவும், சில காய்கள் சிறியதாகவும் இருக்கின்றனவே அதற்குக் காரணம் என்ன?

பாப்பா:- அது ஏன் அப்பா!

அப்பா:- அம்மா! சில பூக்களில் மகரந்தப் பொடியும் சூல் முட்டையும் காயாகக் கூடியபடி விளைந்திருந்திருந்தாலும் அவ்வளவு பலமுடையனவாக இருக்கா. அதனால் தான் அந்தப் பூக்களில் உண்டாகும் காய்கள் சிறியனவாக இருக்கின்றன. அவற்றில் சில பெரிதாகு முன்பே உதிர்ந்து போனாலும் போகும்.

பாப்பா:- ஆம். அப்பா! நம்முடைய தோட்டத்திலுள்ள மாமரத்தில் சில பழங்கள் பெரியதாயும் சில பழங்கள் சிறியதாயுமிருக்கின்றன. சில காய்கள் பழுக்காமலே வெம்பி உதிர்ந்து விடுகின்றன. அதற்கெல்லாம் மகரந்தப் பொடியும் சூல் தாதுவும் சரியான வளர்ச்சி பெறாததுதான் காரணமோ, அப்பா!

அப்பா:- ஆம், அம்மா? அதே மாதிரிதான் சிறுவர்கள் எல்லோரிடத்திலும் சரியான வளர்ச்சியடைந்த ஆண் தாதுவும் பெண் தாதுவும் கிடையா. அதனால் தான் சிலர்க்குக் குழந்தைகள் உண்டாவதேயில்லை. இன்னும் சிலர்க்குக் குழந்தைகள் பிறந்தாலும் அவைகள் சீக்கிரத்தில் இறந்து விடுகின்றன. சில குழந்தைகள் இறவாதிருந்தாலும் சிறியன வாயும் நோயாயும் பலமில்லாமலும் இருக்கும்.

பாப்பா:- அப்படியானால் நல்ல குழந்தைகள் பிறப்பதற்காக ஆண் தாதுவும் பெண் தாதுவும் சரியானபடி வளர்ச்சியடையும்படி செய்வது எப்படி அப்பா!

அப்பா:- அம்மா, அதற்குச் சிறுவர்களும் சிறுமிகளும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பல உள.