பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:— அவைகள் எவை அப்பா! அவைகளைச் சொல்லு. என்னிடம் நல்ல குழந்தைகள் உண்டாக வேண்டாமா? நான் அவைகளைக் கவனித்து நடப்பேன்.

அப்பா:—ஆம், அம்மா! உன்னிடத்தில் நல்ல ஆரோக்கியமும் பலமும் அழகும் உள்ள குழந்தைகளே பிறக்க வேண்டும். அதுதான் அம்மா! என்னுடைய ஆசை. அதற்காக நீ கவனிக்க வேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாகச் சொல்லுகிறேன், கேள். அம்மா! நீ ஆரோக்கிய மாயும் பலமாயும் அழகாயும் இருந்தால்தான் உன்னுடைய குழந்தைகளும் ஆரோக்கியமாயும் பலமாயும் அழகாயுமிருக்கும். அப்படி நீ ஆரோக்கியமாயும் பலமாயும் அழகிாயுமிருக்கவேண்டுமானல் முதன் முதலாக உன்னுடைய உடம்பில் அதிகமான நல்ல ரத்தம் உண்டாக வேண்டும்.

பப்பா:—அதற்கு என்ன செய்ய வேண்டும் அப்பா!

அப்பா:- அதற்காக நீ சுத்தமானதும் சத்துள்ளதும் சுலபமாக சீரணமாகக் கூடியதுமான உணவை உண்ண வேண்டும். அதனால் நீ பால், மோர், நெய், பருப்பு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் அதிகமாகச் சாப்பிட வேண்டும்.

பாப்பா:—அப்பா! நீ சொல்லுகிற மாதிரியே அம்மாவும் சொல்லுகிறாள். அதனாலேயே எங்களுக்கு அதிகமான பாலும் கொடுக்கிறாள். ஆனால் பாலும் நெய்யும் எல்லோர்க்கும் கிடைக்குமா? அதற்கு அதிகமான பணம் வேண்டாமா?

அப்பா:— ஆம், அம்மா! நம்முடைய நாட்டில் ஏழைகள்தான் அதிகம். அதனால் அவர்களுடைய குழந்தைகள் அதிகமான பாலும் நெய்யும் சாப்பிட முடியாது. ஆதலால் அப்படிப்பட்ட குழந்தைகள் தினந்தோறும் அதிகமான மோரும், அத்துடன் ஒரு கரண்டி மீன் நெய்யும் இரண்டு விரலால் எடுக்கக் கூடிய கால்ஷியம் லாக்டேட் என்னும் பொடியும் சாப்பிட வேண்டும். இவைகளை இங்கிலிஷ் மருந்துக் கடைகளில் வாங்கலாம். பால் அதிக விலையானலும் மோர்க்கு அவ்வளவு அதிக விலையில்லை. பாலிலும்