பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

61

 பாப்பா:-அப்பா! இந்த மாதிரியெல்லாம் நடந்து வந்தால்தான் நல்லகுழந்தைகளைப் பெறலாமோ? அப்படியானால் நான் நீ சொல்லுகிறபடியே செய்கிறேன். அப்பா!

அப்பா:-ஆம், அம்மா! அப்படியே செய், நல்லசுகமும் பலமும் அழகும் உள்ள குழந்தைகளைப் பெறலாம்.

பாப்பா:-அப்படியனால், அப்பா! நீ சொல்லுகிற படி நடந்து வந்தா ஆணிடம்16-வயதிலும் பெண்ணிடம்13- வயதிலும் தாது முதிரும் என்று கூறினாயே, அந்த வயதில் நல்ல குழந்தைகள் உண்டாகுமோ?

அப்பா:-அம்மா! ஆண்தாது‌ 16-வயதிலும் பெண்தாது. 13-வயதிலும் பருவமடையும் என்று சொன்னது உண்மை தான். ஆனால் நாம் கடையிலிருந்து மாம்பழங்கள் வாங்கி வருகிறோம். அப்படி வாங்கிவரும் மாம்பழங்களை உடனே சாப்பிட முடிகிறதா?

பாப்பா:-இல்லை அப்பா! சிலவேளைகளில் நன்றாய்ப் பழுத்திருக்கிறது. உடனே சாப்பிடுகிறோம். சில வேளைகளில் நன்றாய்ப் பழுக்கவில்லை, சாப்பிடாமல் நன்றாய்ப் பழுக்கட்டும் என்று பானையில் போட்டு மூடிவைக்கிறோம்.

அப்பா:-அம்மா! அப்படிப் பானையில் போட்டு வைக்றோமே, அவைகளைப் பழங்கள் என்று சொல்லுகிறோம், காய்கள் என்று சொல்லுகிறோமா?

பாப்பா:-அப்பா! அவைகளைப் பழங்கள் என்றுதான் சொல்லுகிறோம், அவைகள் பழங்கள்தானே அப்பா?

அப்பா:-அம்மா! அவைகள் பழங்கள்தான்.

பாப்பா:ஆம், அப்பா, அவைகள் பச்சையாகக்கூட இல்லாமல் மஞ்சளாக இருக்கின்றன அல்லவா அப்பா?

அப்பா:-ஆம் அம்மா! மஞ்சளாகத்தான் இருக்கின்றன அவைகள் பழங்கள்தான். ஆனாலும் சாப்பிடாமல் வைத்து விடுகிறோமே, ஏன்?