பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

63

பாப்பா:- அப்பா சொல்லு. அப்பா! நீ சொல்கிறது எல்லாம் கேட்கக் கேட்க ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவுமிருக்கிறது.கல்யாணம் என்றால் என்ன அப்பா?

அப்பா :-அம்மா! இப்பொழுது உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், சொல்கிறாயா?

பாப்பா :-அது என்ன அப்பா!

அப்பா :-அம்மா! நமக்கும் மற்றப் பிராணிகளுக்கும் என்ன வித்தியாசம் சொல்லு பார்ப்போம்.

பாப்பா :-அப்பா! நமக்கும் மற்றப் பிராணிகளுக்குமுள்ள வித்தியாசம் என்ன? இது நல்லது, இது கெட்டது, இதைச் செய்யலாம், இதைச் செய்யக்கூடாது என்று நமக்குத் தெரிகிறது. அவைகளுக்கெல்லாம் அது தெரியாது என்று எங்களுக்குச் சொன்னாயே, அது தானே?அப்பா!

அப்பா :-ஆம் , அம்மா! அதுதான்வித்தியாசம். மற்றப் பிராணிகள் எவ்லாம் எதையும் யோசித்து இது நல்லது என்று அறிந்து செய்வதில்லை. மனிதர்கள்தான் அப்படிச் செய்கிறார்கள்.

பாப்பா :-அப்பா! தூக்கணங்குருவி எவ்வளவு அழகான கூடு கட்டுகிறது. அதுமாதிரி நாம் கட்ட முடியுமா?

அப்பா:-ஆம் அம்மா! தூக்கணங்குருவிகள் கூடு அழகாகத்தான் இருக்கிறது, அந்த மாதிரி நம்மால் கட்ட முடியாது தான். ஆனாலும் அது கட்டுகிறதே. நம்மைப் போல் ஆலோசனை செய்தா கட்டுகிறது? இல்லை. ஏதோ இயற்கையில் அதற்கு ஒரு பருவத்தில் ஒருவித உணர்ச்சி உண்டாகிறது, உடனே கூடுகட்ட ஆரம்பித்து விடுகிறது. ஆனால் அப்படியா செய்கிறோம் நாம்?

பாப்பா:-அப்பா! இயற்கை உணர்ச்சியால் செய்கிறது என்கிறாயே, நாமும் அப்படித்தானே அப்பா! தாகம் வந்ததும் தண்ணிர் குடிக்கிறோம்.