பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

65

அப்பா:--அதேபோல்தான் பசு படுத்துக் கொள்ளும் பொழுது மூத்திரமான இடமாயிருந்தாலும் அதில் படுத்துக்கொள்கிறது. அந்த மாதிரி நாம் அழுக்கான அசுத்தமான இடத்தில் படுப்போமா?

பாப்பா:--ஆம் அப்பா! எனக்கு இப்போது நமக்கும் பிராணிகளுக்குமுள்ள வித்தியாசம் நன்றாகத்தெரிகிறது.

அப்பா:--பார்த்தாயா அம்மா! பிராணிகள் பசி எடுத்தால் உடனே எதையும் தினன் ஆரம்பித்து விடுகிறது. தாகம் எடுத்தால் எந்தஜலத்தையும் குடிக்க ஆரம்பித்து விடுகிறது.தூக்கம் வந்தால் எந்த இடத்திலும் படுத்துவிடுகிறது. அதுபோல்தான் அவைகள் குட்டிகள் உண்டாகும் விஷயத்திலும் யோசியாமல்தான் காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.

பாப்பா ;--அது எப்படி அப்பா? அது எனக்கு விளங்கவில்லையே.

அப்பா :--அதைச் சொல்லுகிறேன் கேள். அம்மா! நீ சேவற்கோழி பார்த்திருக்கிறாயே. அதற்குப் பசி உண்டானவுடன் என்ன செய்கிறது?

பாப்பா :--அப்பா அது உடனே குப்பையைப் போய்க்கிண்ட ஆரம்பித்து விடுகிறது.

அப்பா :--அதேமாதிரி சேவற்கோழியின் வயிற்றிலுள்ள ஆண் தாது முதிர்ந்தவுடன் அதைப் பெட்டைக்கோழியின் வயிற்றிலுள்ள முட்டையுடன் சேர்க்க வேண்டும் என்ற உணர்ச்சி அதற்கு உண்டாகிறது.

பாப்பா :--அப்பொழுது அது என்ன செய்யும் அப்பா!

அப்பா :--பசி எடுத்தவுடன் இரை எங்கே கிடைக்கும் என்று தேடப் புறப்ப்டுவதுபோல அது இந்த உணர்ச்சி உண்டானவுடனே பெட்டைக் கோழியைத் தேடுகிறது அப்போது ஒரு பெட்டைக்கோழி அங்கே வருகிறது என்று வைத்துக்கொள்.

பாப்பா:--அப்பா! அந்தப் பெட்டைக் கோழியைக் கண்டவுடனே அதன் வயிற்றுக்குள் ஆண் தாதுவை