பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

67

வைத்துக் கொள்வோம். ஆனால் அது மட்டும் போதுமா நல்ல குஞ்சுகள் உண்டாவதற்கு?

பாப்பா : அப்பா! வேறு என்ன வேண்டும்? நீ என்ன கேட்கிறாய், தெரியவில்லையே?

அப்பா:--என்ன அம்மா, இது தெரியவில்லையா? நல்ல குஞ்சுகள் பிறக்க வேண்டுமானால் பெட்டைக்கோழியைப் போலவே சேவலும் நல்லதா இருக்க வேண்டுமல்லவா?

பாப்பா:--ஆம் , அப்பா! இதையா நீ கேட்டாய்? வேறு எதையோ கேட்கிறாய் என்று அல்லவோ நினைத்து விட்டேன்? ஆம், அப்பா! பெட்டைக் கோழியும் நல்லதாக இருக்க வேண்டும், சேவலும் நல்லதாக இருக்க வேண்டும்.

அப்பா:-ஆனால் சேவல் பெட்டைக் கோழியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பெட்டைக்கோழி சேவலைப் பற்றிச் சிந்திப்பதில்லை. உணர்ச்சி வந்தவுடன் ஆண் தாதுவையும் பெண் முட்டையையும் சேர்த்துவிட ஆரம்பித்து விடுகின்றன. நல்ல முட்டை உண்டாகுமா, நல்ல குஞ்சுகள் உண்டாகுமா என்று யோசிப்பதே இல்லை.

பாப்பா:-ஆம், அப்பா! ஆனால் மனிதர்கள் அப்படி யோசியாமல் செய்வார்களா? செய்யமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.

அப்பா:-ஆம், அம்மா! நீ எண்ணுவது சரிதான். மனிதர்கள் யோசியாமல் செய்யமாட்டார்கள். இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது அம்மா!

பாப்பா;--அது என்ன அப்பா!

அப்பா:--அம்மா, ஆண் சேவல் தன்னுடைய தாது வைப்பெட்டைக் கோழியின் வயிற்றுக்குள் போகும்படி செய்துவிடுகிறதே, அதன்பின் அது என்ன செய்கிறது?

பாப்பா:--அதன் பிறகு அது கீழே இறங்கிப் போய் விடுகிறது.