பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குழந்தை எப்படிப் பிறக்கிறது ?

பாப்பா:—அப்பா! தங்கச்சியைப் பார் எவ்வளவு அழகாயிருக்கிறாள். அப்பா! அவள் எவ்வளவு சின்னக் குழந்தையாக இருக்கிறாள். அவள் அம்மா வயிற்றிலிருந்து வந்தாளாம். நானும் அம்மா வயிற்றிலிருந்து தான் வந்தேனாம், நானும் அப்பொழுது தங்கச்சியைப் போல சின்னக் குழந்தையாகத்தான் இருந்தேனாம்.

அப்பா:—ஆமாம் அம்மா! நீயும் அம்மா வயிற்றிலிருந்துதான் வந்தாய், நீயும் சின்னக் குழந்தையாகத்தான் இருந்தாய். அம்மா! நீ மட்டுமா அப்படி? நானுங்கூட என்னுடைய அம்மா வயிற்றிலிருந்துதான் வந்தேன், நானும் அப்போது தங்கச்சியைப் போலச் சின்னக் குழந்தையாகத் தான் இருந்தேன். அம்மாவும் அப்படித்தான், மாமாவும் அப்படித்தான், அண்ணனும் அப்படித்தான். எல்லா மனிதர்களும் அவர்களுடைய அம்மா வயிற்றிலிருந்துதான் வந்தார்கள். அப்பொழுது சின்னக் குழந்தையாகத்தான் இருந்தார்கள் பிறகுதான் சிறிது சிறிதாக வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள். தங்கச்சியும் நீயும் அப்படியே வளர்ந்து அம்மா மாதிரி பெரிய பெண்கள் ஆவீர்கள்.

பாப்பா:—அப்பா! இது மிகவும் ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?

அப்பா:—அம்மா! ஆச்சரியம்தான். அம்மா தோட்டத்தில் கீரைத்தண்டு போட்டிருக்கிறாளே தெரியுமல்லவா? அது முதலில் எப்படியிருந்தது?

பாப்பா:—அப்பா! கீரைத்தண்டுகள் முதலில் சிறியவைகளாக இருந்தன. இப்பொழுது பெரிய தண்டாக உயரமாக வளர்ந்திருக்கின்றன.

அப்பா:—அதுபோல்தான் நாமும் முதலில்சிறு குழந்தையாக இருந்து பொிய மனிதர்களாக ஆகிறோம் அம்மா! கீரைத்தண்டு சிறுசெடி-ஆலமரம் பாா்த்திருக்கிறாயா?