பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

71

நல்ல குழந்தை பெறவேண்டுமென்று விரும்புகிறவர்கள் எந்தப் பெண்ணுடனும் சேர்ந்து வாழலிரும்பமாட்டார்கள் இவள் ஆரோக்கியமாகயிருக்கிறாளா, அழகாயிருக்கிறாளா இவளுக்கு பலமிருகிறதா, அறிவு இருக்கிறதா நல்ல அன்புடையன்ததானா , நம்முடன் சேர்ந்து வாழ்வாளா என்றெல்லாம் யோசிப்பார்கள், அப்படிப்பட்ட பெண்ணைத்தான் விரும்புவார்கள். அவளுடன் தான் குழந்தைகள் பெற்றுக் குடும்பம் நடத்துவார்கள்.

பாப்பா: அந்த மாதிரிதான் அப்பா நீயும் யோசித்துத் தான் அம்மாவுடன் வாழ எண்ணினாயோ?

அப்பா: ஆம், அம்மா! அப்படி இரண்டு வருஷகாலமாக யோசித்துத்தான் அம்மாவைக் கலியாணம் செய்து கொண்டேன்.

பாப்பா: அப்படியானால் அம்மாவும் உன்னைப்பற்றி அந்தமாதிரி யோசிக்க வேண்டாமா?

அப்பா: ஆம், அம்மா! உன்னுடைய அம்மாவும் அந்த மாதிரி என்னைப்பற்றி யோசித்துத்தான் என்னை மணந்துகொள்ள இசைந்தாள்.

பாப்பா: இந்த விதமாக ஒரு ஆணும் பெண்ணும் நல்ல குழந்தைகள் பெறுவதற்காகவும், ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்துவதற்காகவும் ஒருவரைப்பற்றி ஒருவர் யோசித்து ஒன்று சேருகிறார்களே, அதற்குத்தான் கல்யாணம் என்ற பெயரோ அப்பா!

அப்பா: ஆமாம் அதுதான் அம்மா! இப்பொழுது தெரிந்து கொண்டாயா? மிருகங்கள் முதலியவைகளுக்கு அறிவில்லாததால் குஞ்சுகுட்டிகளை யோசியாமலே பெறுகின்றன மனிதர்களோ யோசித்தே குழந்தைகளைப் பெறுகிறார்கள். அதனால்தான் அவர்கள் ஆணும் பெண்ணும் அன்பு கொண்டு ஒன்றாக வாழ்கிறா‌ர்கள். குழந்தைகள் பெறவேண்டும் என்று ஆசை கொண்ரு அதற்கான அறிவை உபயோகித்து நல்ல