பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

குழந்தைகளைப் பெறுகிறர்கள் அந்தக் குழந்தைகளை நல்ல விதமாக வளர்க்கிறர்கள்.

பாப்பா: ஆம், அப்பா! அந்த விதமாகத்தான் நீயும் அம்மாவும் எங்களை வளர்க்கிறீர்கள் அப்பா! நாங்களும் அந்த விதமாகவே நடந்து கொவ்வோம். எதுவும் யோசிகாமல் அவசரப்பட்டுச் செய்துவிட மாட்டோம்.

அப்பா: அப்படித்தான் நடக்க வேண்டும். அம்மா! அதுதான் நல்லது. எங்களைப்போலவே நீங்களும் நடந்தால் உங்களைப் போலவே நல்ல குழந்தைகளைப் பெறுவீர்ாள். அம்மா! ஏதேனும் சந்தேகம் உண்டானால் ஏதேனும் தெரியாமல் போனால் எங்களிடம் வந்து கேளுங்கள். எல்லாம் உங்களுக்கு நாங்கள் தெளிவாகச் சொல்லித் தருவோம்

பாப்பா: ஆகட்டும், அப்பா! நீ சொல்லுகிற படியே தான் செய்வேன், நீ சொல்லுகிறபடியே நடந்து நல்ல குழந்தைகளைப் பெற வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசையாயிருக்கிறது.

அப்பா : அம்மா, பார்த்தாயா இப்பொழுது ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேர்ந்துதான் செடி கொடிகள்,பட்சி பறவைகள், ஆடுமாடுகள் எல்லாம் உண்டாகின்றன. அதே மாதிரி ஆண் தாதுவும் பெண் முட்டையும் சேர்ந்துதான் மனிதர்களும் உண்டாகிறார்கள். அந்த விஷயத்தில் அவைகளுக்கும் நமக்கும் வித்தியாசமில்லை. ஆனால் அவைகள் யோசித்துச் செய்வதில்லை, நாம் யோசித்துச் செய்கிறோம். அதனால் தான் நாம் அவைகளை விட உயர்ந்தவர்கள். அந்த மாதிரியே நீங்களும் நடந்து கொள்ள வேண்டும், அம்மா.

பாப்பா: ஆகட்டும் அப்பா.

(முற்றும்)