பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

சுழற்றிச் சுழற்றி அது முன்னேறிச் செல்லுகிறது. புணர்ச்சியில் வெளிப்பட்ட அத்தனை விங்தனுக்களும் முன்னோக்கிப் புறப்படுகின்றன. ஆனால், ஒன்றுதான் அண்டத்தை (Egg) அடைந்து அதற்குள் புகுவதில் வெற்றியடைகிறது. மற்றவை யெல்லாம் நசித்துப் போகின்றன.

அண்டம் என்பது தாயின் கருப்பையோடு சம்பந்தப்பட்டுள்ள சூல்பை (Ovary) யில் உண்டாகும் ஒரு சிறு

அண்டம்
சுமார் 200 மடங்கு பெரிதாக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது

அணு. இது விந்தணுவைவிட உருவத்திலே சற்றுப் பெரியது. இந்த அண்டத்தை உண்டாக்கும் சூல்பைகள் இரண்டு இருக்கின்றன. புணர்ச்சியின்போது ஒவ்வொரு முறையும் லட்சக்கணக்கான விந்த்ணுக்கள் வெளிப்படுகின்றன என்று சொன்னேன். ஆனால், அண்டமானது மாதத்திற்கு ஒன்றுதான் உற்பத்தியாகிக் கருப்பையை கோக்கிவரும், இரண்டு சூல் பைகளில் ஒன்றிலிருந்து ஒரு மாதத்திற்கு ஒன்றும், மற்றதிலிருந்து அடுத்த மாதத்திற்கு ஒன்றுமாக மாறிமாறி அண்டம் வெளியாகின்றது.