பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

கருவாக மாறச் செய்கிறது. அப்படிச் சந்திக்காவிடில் அவ்வண்டம் பயனற்று அழிந்து விடுகிறது.

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf
பெண் குறி:அண்டம் தோன்றுதல்

1. யோனி. 2. கருப்பை. 3. கருமூலக் குழாய். 4. அண்டம். 5. சூல்பை.
கருமூலக் குழாய் வழியாக அண்டம் கருப்பையைச் சேர்கிறது.

அண்டத்திற்குள் பாயும்போது விந்தணுவின் வால் அறுந்துபோகும். தலைமட்டும் உள்ளே செல்லும். இவ்வாறு விந்தணுப் பாய்ந்து கருவாக மாறிய அண்டத்தைத்தான் நான் முன்பு பூரித்த அண்டம் என்று குறிப்பிட்டேன்.

பூரித்த அண்டம் உடனே ஒன்று இரண்டாகவும், இரண்டு நான்காகவும் நான்கு எட்டாகவும் இப்படி இரட்டித்துப் பிரிந்து பெருகி ஒரு பிழம்பாகத் திரண்டு வந்து கருப்பையில் ஏதாவது ஓர் இடத்தில் ஒட்டிக்கொண்டு வளர ஆரம்பிக்கிறது. கருப்பையின் உட்புறச் சுவரில் ஒட்டிக் கொண்டது முதல் அது தாயின் உடம்பிலிருந்தே போஷணையை எடுத்துக்கொண்டு வளர்ந்து ஒன்பது மாதத்தில் அற்புதமான குழந்தையாக உருவெடுக்கிறது.

குழந்தையின் தோற்றத்திற்குக் காரணமான பூரித்த அண்டத்தைப் பற்றியும் அப்பூரித்த அண்டத்திற்குக் காரணமான விந்தணுவைப் பற்றியும் அண்டத்தைப் பற்றியும் சுருக்கமாகக் கூறினேன். (இதைப்பற்றி, கருவில் வளரும் குழந்தை என்ற நூலில் விரிவாக விளக்கியிருக்-