பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
12
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


விந்தணுவிலும், அண்டத்திலும் 24 ஜோடிக் கணுக் கோல்கள் இருக்கின்றன என்று சொன்னேன். இவை முதிர்ச்சி யடையும்போது இரண்டிரண் டாகப் பிரிந்து ஒவ்வொன்றிலும் 24 கனுக் கோல்கள்தான் இருக்கும். ஆகவே, கரு வுண்டாவதற்குக் காரணமான முதிர்ந்த விந்தணுவிலும் அண்டத்திலும் தனித்தனி 24 கனுக்கோல்கள் இருக்கும். அந்த விங் தணு அண்டத்துள் பாய்ந்து அண்டம் பூரிக்கும்போது பழையபடி அதில் 24 ஜோடிகளாய் விடுகின்றன. விந்தணு ஆண்டம் ದಿ'? இங்குள்ள படத்திலே, முதிர்ந்த விக் ஐ:. அக் கணுவிலும் அண்டத்திலும் ஒரேமாதிரி உருவமுள்ள மூன்று கணுக்கோல்கள் காண்பிக்கப்பட்டுள்ளன. தெளிவாகத் தெரியும்பொருட்டு 24-யும் வரையவில்லை. இவ்வாறே மற்றவையும் வேறு வேறு வடிவங்களில் இருக்குமென்று மட்டும் ஊகித்துக்கொள்ள வேண்டும். விந்தணுப் பாய்ந்து அண்டம் பூரிப்பதைக் கீழ்க்கண்ட படம் விளக்குகிறது. அண்டத்திற்குள் விந்தனுப் பாய்ந்தபின் 24 ஜோடிக் கணுக்கோல்கள் ஆவதை விளக்கும் படம். தெளிவு பற்றி 3 ஜோடிகள் மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளன. பூரித்த அண்டத்திலுள்ள ஜோடியான மூன்று கணுக் கோல்கள் படத்தில் தெரிகின்றன. இவ்வாறு 24 ஜோடிகள்