பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


வரிசை கெட்டுப் பேர்வதற்கும் உணவிலுள்ள குறைகளே முக்கிய காரணம் என்பதை நாம் நன்கு ஞாபகத்தில் வைத் துக்கொள்ள வேண்டும். மல்ல உணவைப் போலவே சுத்தமான காற்றும் அவசியம். தாராளமாக ஒடியாடி விளையாடுவதற்குச் சூரிய ஒளி படும் திறந்த வெளியும் வேண்டும். குழந்தையின் வளர்ச்சி சரிவர நடைபெறுவதற்கு நல்ல காற்று வேண்டு மென்பதை முன்பே நாம் அறிந்திருக்கிருேம். சூரிய ஒளியும் அதைப்போலவே அவசியமென்று இப்பொழுது வைத்தியர் கள் கண்டு சொல்லுகிருர்கள். எலும்புகளின் வளர்ச்சிக் குச் சுண்ணும்புச் சத்துக் கலந்த உணவு மட்டும் போதாது. சூரிய ஒளியும் வேண்டுமாம். சூரிய ஒளியானது உணவை உடம்பில் சேர்ப்பதற்கும் உதவி செய்கின்றது. திறந்த வெளியில்ே சூரிய கிரணங்கள் உடம்பிலே படும்படி ஒடியாடித் திரிந்து நல்ல காற்றைச் சுவாசிப்பது போலவே உடல் வளர்ச்சிக்கு ஒய்வும் தூக்கமும் அவசிய மாகும். குழந்தை பிறந்த முதல் ஆறேழு வாரங்கள் வரை அதன் வளர்ச்சி மிக வேகமாக கடக்கின்றது. அதனுல்தான் குழந்தை அந்தக் காலத்தில் தினமும் இருபது மணி நேரத் திற்குமேல் துரங்கிக் கொண்டிருக்கிறது. பின்பு வரவரத் தூங்கும் கேரம் குறைய ஆரம்பித்து ஆருவது மாதத்தில் சுமார் 16, 17 மணியாக ஏகதேசமாக அமைகின்றது. மேற்கூறியவற்றை யெல்லாம் கன்கு கவனிக்க மேல் நாடுகளில் பல வசதிகள் ஏற்படுத்தி யிருக்கிருர்கள் குழந்தையை அடிக்கடி பரீகதித்துப் பார்க்கவும், அதற்கு அவசியமான உணவு முதலியவற்றைப் பற்றிக் கூறவும் நிபுணர்களே ஆங்காங்கு நியமித்திருக்கிருர்கள். ருஷியா போன்ற மேல்நாடுகளிலே குழந்தை கருவிலிருக்கும்போதே அதன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளைப் பெற செளகரி யங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கெல்லாம் குழந்தை