4. பேச்சும் பாட்டும்
ஒவ்வொரு குழந்தையும் நன்றாக வளர்ந்து, உலகத்திலே தனது ஸ்தானத்தைக் குறையில்லாமல் வகித்து, மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்கு அதன் கடமையைப் பூரணமாகச் செய்யவேண்டுமானல் அதன் திறமைகள் அனைத்தும் மலரும்படியாக வளரவேண்டும். அப்படி வளர்ந்தால்தான் அக்குழந்தையால் உலகத்திற்கு நன்மை உண்டு. அதை வெற்றிகரமாகச் செய்வதற்கு அத்தியாவசியமாக வேண்டுவது ஒன்று. அதாவது அன்பும் ஆதரவும் உள்ள சூழ்நிலையில் குழந்தை சுதந்திரமாக வளர வேண்டும்.
ஒரு அழகான மெல்லிய பூச்செடி கன்கு வளர்வதற்கு நிலத்தை வேண்டியவாறு பண்படுத்தி மற்ற சௌகரியங்களையும் செய்துவிட்டால் அது தானாகவே வளர்ந்து அதன் எழிலும் நறுமணமுமாகிய பயனை உலகத்திற்குத் தருகின்றது. அதுபோலவேதான் பூங்குழந்தையும். அதன் பூரண வளர்ச்சிக்கு அன்பு வேண்டும், அனுதாபம் வேண்டும். அவற்றைவிட முக்கியமாகச் சுயேச்சை வேண்டும்.
பெற்றோருக்குக் குழந்தையிடம் இயல்பாகவே அன்பிருக்கின்றது. அந்த அன்பினால் அவர்கள் குழந்தையை நன்கு வளர்க்க ஆசைப்படுகின்றார்கள். அது உலகத்தில் தலைசிறந்து விளங்கவேண்டுமென்று திட்டங்கள் வகுக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆசையையும் திட்டங்களையும்விட அவர்கள் வாழும் வாழ்க்கையமைப்பே குழந்தையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது; அவர்கள் குழந்தையிடம் நடந்துகொள்ளும் வகையும் மிக முக்கிய-