பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேச்சும் பாட்டும்

25

மானது. ஏனெனில் திட்டங்களையும் விதிகளையும் விட இவைதான் குழந்தையின் உள்ளத்திலே அதிகமாகப் பதிகின்றன. வீட்டு வாசலிலே பிச்சைக்காரியைக் கண்டதும் பாட்டி அவளை வாயில் வந்தபடி வைகிறாள். குழந்தை அதைக் கவனித்துக் கொண்டே இருக்கிறது. அம்மாளுக்கு வேலைக்காளியின்மேல் அதிருப்தி. அதனால் என்ன என்னவோ பேசி விடுகிறாள். குழந்தை பக்கத்தில் நின்று அதையும் கேட்டுக் கொண்டிருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்கும் மனத்தாங்கல் ஏற்பட்டுவிடுகிறது. பேச்சும் வளர்ந்து விடுகிறது. தாங்கள் நன்கு வளர்க்கவேண்டு மென்று திட்டம் வகுத்த குழந்தை அருகில் இருப்பதைக் கூட அவர்கள் பொருட்படுத்துவதில்லை. பிறகு குழந்தை தான் கேட்டவற்றையே திருப்பிப் பேசினல் அதன்மேல் குற்றம் கூறி என்ன செய்வது? அப்படியெல்லாம் பேசாதே என்று அதட்டி அதன் வாக்குச் சுதந்திரத்தைப் பறிமுதல் செய்து என்ன பயன்பெற முடியும்? பெற்றோரும் வீட்டில் உள்ள மற்றவர்களுக்தானே அதற்கு உதாரணம்? அவர்களைப் பார்த்துத்தானே குழந்தை பழக வேண்டும்?

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் நமது கடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிரச் சிறுவர்களே அவ்வாறு பேசக் கூடாது என்று தடுப்பதால் யாதொரு நன்மையுமில்லை. பெரியவர்களைப்போல தான் ஏன் பேசக்கூடாது என்ற ஐயமும் குழப்பமுந்தான் குழந்தை உள்ளத்தில் ஏற்படும்.

குழந்தை பூமியிற் பிறந்தவுடன் அழுகிறது. இது உண்மையில் அழுகையல்ல. காற்று சுவாசப் பையில் புகுந்து வெளிவருவதால் ஆரம்ப காலத்தில் உண்டாகும் சப்தமே அழுகையாகக் கருதப்படுகின்றது. பின்பு அழுகையே குழந்தைக்கு ஏற்படும் பசி, தாகம், வலி,