பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

துன்பம் முதலிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் வாக்காக அமைந்து விடுகிறது. ஆகவே குழந்தை தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வாக்குச் சுதந்திரத்துடன்தான் பிறக்கிறது. அதைக் கட்டுப்படுத்த முயலாமலிருப்பது தான் குழந்தையின் மலர்ச்சிக்கு உதவி செய்ததாகும். வாக்குச் சுதந்திரத்தை இழிந்த முறையில் கையாளாமல் பார்த்துக் கொள்வதற்கு நமது உதாரணமும், நாம் அமைத்துக் கொடுக்கும் சூழ்நிலையுமே சரியான வழிகளாகும்.

குழந்தையின் உணர்ச்சிகளை வெளியிடுவதற்கு வேண்டிய சந்தர்ப்பமில்லாமல் அவைகளை அடங்கிக் கிடக்கும்படி செய்வதால் மறை உள்ளத்திலே (Unconcious mind) பல குழப்பங்கள் ஏற்பட்டுப் பிற்காலத்திலே அவை வெவ்வேறு துறைகளில் விரும்பத்தகாத முறைகளில் வெளியாவதற்குக் காரணமாகின்றன. சிறுவர்களின் வளர்ச்சியிலே அவர்கள் உள்ளத்தில் எழுந்து குமுறும் உணர்ச்சிகளைத் தாராளமாக யாராவது ஒருவரிடமாவது வெளியிடும் சுதந்திரமும் நம்பிக்கையும் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுது அவர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறவும் அவர்கள் உள்ளத்தைத் திடப்படுத்தி உயரச் செய்யவும் வழி கிடைக்கும்.

இனிப் பேசப் பழகும் இளங்குழந்தை ஒரு சொல்லே உச்சரிக்கப் பழகிக் கொண்டால் அதையே திருப்பித் திருப்பிச் சொல்லி மகிழ்கின்றது. அதன் ஆரம்பப் பேச்சுத் திருத்தமாக அமையாவிட்டாலும் அதற்காகக் கேலி செய்வது பெருந் தவறாகும். குழந்தையின் வாக்கு வளர்ச்சிக்குப் பாதகம் செய்ததாகும். அன்போடும் அனுதாபத்தோடும் சரியான உச்சரிப்பைச் சொல்லிக் கொடுக்கலாம். சிறுவர்கள் பேசும்போது இடையிடையே தடைப்படுத்தி, இப்படிச் சொல்லாதே அப்படிச் சொல் என்று திருத்தம் செய்து கொண்டேயிருப்பதும் சரியல்ல. அவ்வாறு செய்வதால்