பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
27
பேச்சும் பாட்டும்


சிறுவனுக்குத் தன் பேச்சிலேயே நம்பிக்கை குறைந்து பிறகு எதற்கெடுத்தாலும் பிறருடைய திருத்தத்தையே எதிர்ப்ார்க்க ஆரம்பிப்பான். இது கடைசியில் திக்கித் திக்கிப் பேசும் பழக்கமாய் முடியும். ராமசாமி என்ற பள்ளிச் சிறுவனுக்கு ஏழு வயதிருக் கும். அவனே அச்சமில்லே அச்சமில்லே' என்ற பாரதியார் பாட்டை யார் பாடச் சொல்லிக் கேட்டாலும் உற்சாகத் தோடும் அபிநயங்களோடும் பாடுவான். அவனுடைய அபிநயத்தை அபிவிருத்தி செய்ய விரும்பிய சிலர் அவன் பாடும்போது இடையிடையே தடை செய்து வந்ததால் இப்பொழுது அவன் திக்குவாயனுய் விட்டான். இரண்டு வார்த்தை சேர்த்துப் பேசவும் சிரமப் படுகிருன். வாக்குச் சுதந்திரத்தின் அவசியத்தையும் பயனையும் குழந்தைகளின் கேள்விகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். குழந்தை சதா கேள்வி கேட்கும். ஒரு குழந்தையின் கேள்வி களே ப் பாருங்கள். உதாரணத்துக்காக அவற்றைச் சொல்லுகிறேன். ரேடியோவில் பேச்சுக் குரல் கேட்கிறது. குழந்தை கேட்கிறது: "அப்பா, யார் பேசறது?' 'ரேடியோ அண்ணு பேசருர், "எங்கே அவரைக் காணுேமே? அவர் சென்னை யில் இருக்கிரு.ர்.” இந்தப் பெட்டிக்குள்ளா இருக்கிருர்?" 'இல்லை சென்னேயிலே-துTரத்திலே இருக்கிரு.ர்.” குழந் தைக்கு இது ஒன்றும் விளங்கவில்லை. மறுபடியும் கேட் (...Y கிறது. அங்கிருந்துபேசின. இங்கே எப்படிக் கேட்கும்?" இப்படிக் கேள்விகள் வளர்ந்து கொண்டே போகும். சில கேள்விகளுக்குப் பதில் சொல்வது வெகு சிரமம். சில வற்றிற்கு நமக்கே பதில் தெரியாது. அதனல் கேள்வியே கேட்கக் கூடாதென்று குழந்தையை அதட்டி மிரட்டி