பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
32
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

தண்ணீரை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொன்றில் ஊற்றுவதென்றால் குழந்தைக்கு ஒரே ஆனந்தம். கொஞ்சம் வயதான குழந்தைகள் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதிலும், துணிகளைத் துவைப்பதிலும், வாசலுக்கு நீர் தெளிப்பதிலும், பாத்திரங்களைத் துலக்குவதிலும் அளவிலா மகிழ்ச்சி கொள்ளுகின்றன.

மண்ணைப் பிசைந்து பண்டங்கள் செய்வதும், மணலிலே சிறு வீடு கட்டிக் குடும்ப வாழ்க்கையையே விளையாட்டாக நடத்துவதும் குழந்தைகளுக்குப் பெரியதோர் உற்சாகத்தைத் தருகின்றன. வீட்டிலே கண்ட செயல்களையெல்லாம் அவைகள் தங்கள் விளையாட்டிலே நடிக்கின்றன; வீட்டிலே கேட்கின்ற பேச்சுக்களையும் அப்போது பேசுகின்றன.

இந்த விளையாட்டுக்களுக்கு வசதி செய்வதில் அதிகப் பொருட் செலவு கிடையாது. வீட்டோடு சேர்ந்துள்ள காலியிடத்திலே அதற்கு ஏற்பாடு செய்யலாம். நாம் செய்யாவிட்டாலும் குழந்தைகள் அந்த இடத்தைத் தாமே தேடிக்கொண்டு செல்லும். நகரங்களிலே பல வீடுகள் காலியிடமில்லாமல் தெருவோடு சேர்ந்தாற் போலவே இருக்கும். அப்படிப்பட்ட வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் களிமண் சேகரித்து வேறு வசதிகள் செய்ய முயல வேண்டும். கொஞ்சம் அதை விட்டில் ஒரு பக்கத்திலே ஒரு சிறு தொட்டியில் வைத்துக்கொள்ளலாம். தண்ணீர் விட்டுப் பிசைந்து களிமண்ணில் பொம்மைகளும், சிறு சிறு பாத்திரங்களும் செய்வதில் குழந்தைகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. வீட்டில் காலியிடம் இல்லாவிட்டாலும் மாலை வேளைகளில் பொது விளையாட்டு மைதானங்களுக்கும், தோட்டப்புறங்களுக்கும் அழைத்துச் செல்லலாம். கடற்கரையின் அருகிலும்,நதிக்கரையின் அருகிலும் வசிப்பவர்கள் தங்கள் குழந்தை-