பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

தானகவே எண்ணிப் பார்க்கும் திறமையை வளரும்படி செய்யவேண்டும். அப்பொழுதிருந்தே அதை அடக்கி நக்கிவிடாமல் மேலோங்குவதற்கு வேண்டிய சுதந்திரம் அளிக்கவேண்டும். அவ்வாறு செய்தால்தான் மனிதனுக்கு விசேஷமாக வாய்த்துள்ள சக்தி அதன் இயல்பான முழு மலர்ச்சியடையும்.

வயதிற்கேற்றவாறு சிறு விஷயங்களைப் பற்றிச் சொந்தமாக எண்ணிப் பார்க்கச் சந்தர்ப்பமும், உரிமையும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் பெரியவர்களுடைய எண்ணத்தையும், தீர்மானத்தையுமே சிறுவன் ஏற்றுக் கொள்ள நேரிட்டால் அவனுக்குத் தனது சொந்த சக்தியை விரிவடையச் செய்து கொள்ளச் சமயமேற்படாது. உடல் உறுப்புக்களையும் பிற ஆற்றல்களேயும் பயிற்சியால் திடப் படுத்துவதுபோலச் சிந்தன சக்தியையும் பயிற்சியாலேயே திடப்படுத்த வேண்டும்.

சிறு குழந்தை தான் பார்க்கின்ற பொருள்களைப் பற்றியும் செய்கின்ற காரியங்களைப் பற்றியும்தான் முக்கியமாக் எண்ணிப் பார்க்கமுடியும். கொஞ்சம் வயது வந்த சிறுவர்கள் சிக்கல் அதிகமில்லாத லேசான விஷயங்களைப் பற்றி யோசித்து முடிவு செய்யக்கூடும். ஆனால் சத்தியம், கொல்லாமை என்றிப்படிப்பட்ட கருத்தியலான விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பது சிரமம். இங்கு நாம் மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதென்னவென்ருல் குழந்தைப் பருவத்திலும் அதற்கேற்றபடி எண்ணமிடும் திறமை உண்டு; ஆதலால் அதற்கு வேண்டிய சமயமும் சுதந்திரமும் அளிக்க வேண்டுமென்பதே.

சிறுவர்களுக்குச் சுயேச்சையாகச் சிந்தனை செய்யச் சமயமளிப்பதுடன் அவர்கள் வெளியிடும் எண்ணங் களுக்கும் மரியாதை காண்பிக்கவேண்டும். சிறுவன் உற்சாகத்தோடு ஒரு யோசனை சொல்லுகிறான். உடனே