பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எண்ணித்துணியும் பேராற்றல்

43

குத் தானகவே எண்ணிப் பார்த்து முடிவுக்கு வரும் சக்தர்ப்பம் அளிக்கவேண்டும். எல்லா விஷயங்களையும் ஆசிரியர்களே கூறிவிடுவது சரியான முறையல்ல. மாணவன் தனது ஆலோசனையால் உண்மையைக் கண்டுபிடிக்க முயன்றால் அதனால் அவனுடைய மனத்திறமை வளர்வதோடு, தெரிந்து கொண்ட விஷயமும் உள்ளத்தில் ஊன்றிப் பதிந்து விடுகிறது.

பள்ளிகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள், பந்தய விளையாட்டுக்கள், நாடகங்கள் முதலியவற்றிற்கு அவசியமான திட்டங்களைச் சிறுவர்களே வகுத்துக் கொள்ளவும், அவர்கள் எண்ணப்படியே கடத்தவும் விட்டு விடவேண்டும். ஒரு காரியத்தைப் பொறுப்பேற்று நிர்வகிக்க நேரிடும்போதுதான் அதைப் பற்றித் தீவிரமான ஆலோசனையும் பிறக்கின்றது. ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆங்காங்கு உதவி புரிபவர்களாகப் பின்னணியிலேயே இருந்து விடலாம். சிறுவர்கள் தவறு செய்தாலும் அதை அடிக்கடி சுட்டிக் காண்பித்து, அவர்களுக்குத் தங்களிடத்திலேயே நம்பிக்கையில்லாமற் போகும்படி செய்யக்கூடாது. அவர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் உண்டாகுமாறு தைரியம் சொல்லி உதவவேண்டும்.

வகுப்பில் பாடம் சொல்லிக் கொடுக்கின்றபோதும் சிறுவனுடைய சிந்தணா சக்தியை வளர்ப்பதிலேயே ஆசிரியர் நோக்கங் கொண்டிருக்க வேண்டும். பெளதிக சம்பந்தமான ஒரு உண்மையைப் பற்றிப் போதிக்கின்ற காலத்தில் அதை எடுத்தவுடனே கூறிவிடாமல், மாணவனே கண்டு பிடிக்கும்படியாகச் செய்யலாம். ஒரு கணக்குச் செய்கின்ற போது சந்தேகமேற்பட்டால் அதை ஆசிரியரே நிவர்த்தி செய்துவிடாமல், மாணவன் தனது ஆலோசனையாலேயே நிவர்த்தி செய்துகொள்ள உதவலாம். இம்மாதிரி சந்தர்ப்பங்கள் பல இருக்கின்றன. அவற்றை நன்கு பயன்படுத்திச்