பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
44
குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்


சிறுவனுடைய மனத் திறனை மேலோங்கச் செய்யலாம். பல உண்மைகளை ஆசிரியரோ புத்தகமோ எடுத்துரைப்பதும் அவற்றை ஏற்றுக் கொள்வதுந்தான் கல்வி என்ற எண்ணம் தவருனது. உண்மைக் கல்வியானது வாழ்க்கையில் எதிர்ப் படுகின்ற பிரச்னைகளைச் சமாளித்துக் கொண்டு வெற்றி பெறும்படியாக எண்ணமிடும் திறமையை வளர்ப்பதாக இருக்கவேண்டும். சுருக்கமாகக் கூறினல் பரீட்சையில் வெற்றிபெறச் செய்வது மட்டும் உண்மைக் கல்வியல்ல : வாழ்க்கைப் பரீட்சையிலும் வெற்றி பெறச் செய்வதே உண்மைக் கல்வி. அவ்வாறு வெற்றி பெறுவதற்குச் சிறுவர்களுடைய சிந்தன சக்தி நன்கு மலரும்படி செய்யவேண்டும். அதற்குச் சிறுவர்களுடைய மனப்போக்கை அன்போடும், அனுதாபத் தோடும் அறிந்துகொண்டு அதைச் சுயேச்சையாக வளரும் படி செய்வதே சிறந்த வழியாகும்.