பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 குழந்தை மனமும் அதன் 'குழந்தையிலிருந்தே அடித்து மிரட்டி வைக்க வேணும். அப்போது செல்லம் கொடுத்துவிட்டுக் கொஞ்சம் பெரியவனை பிறகு அடித்தால் இப்படித்தான் ஓடுவான்" என்று காரணங் கண்டுபிடித்தார் வேருெரு பிரயாணி. 'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்று இன்னொருவர் பழமொழியில் பேசி ஒர். அவர்கள் பேச்சைக் கேட்கக் கேட்க என்னேயறியாது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. பலர் இவர்களேப் போலத்தான் பொதுவாக கம்பிக்கை வைத்திருக்கிருர்கள். அடித்து வளர்க்காத பிள்ளையும் பிடித்து வளர்க்காத மீசையும் உருப்படாவாம். பெற்ருேர்களுக்குத் தங்கள் குழந்தைகளிடத்தில் அளவுகடந்த பிரியம் இருக்கிறது. இருந்தாலும் குழந்தை களே அடிக்கிருர்கள். அப்படிச் செய்தால்தான் குழந்தை கள் திருந்தி, நல்ல வழியில் நடக்கக் கற்றுக்கொள்ளும் என்பது அவர்களுடைய எண்ணம். இது முற்றிலும் சரி யல்ல. நல்ல முறையில் வளர்ப்பதற்குக் குழந்தையை அடிக்க வேண்டிய அவசியமில்லை. அடிப்பதனலும் மிரட்டுவதனுலும் குழந்தைக்கு நன்மையை விடத் தீமையே அதிகம் விளேகின்றது என்று குழந்தையின் மனத்தை ஆராய்ந்தறிந்த மனத் தத்துவர்கள் கூறுகிறர்கள். 'சில சமயங்களிலே குழந்தைகள் பிடிவாதம் செய் கின்றனவே, அப்பொழுது அடிக்காமல் என்ன செய்வது? எவ்வளவு அன்பாகவும் பொறுமையாகவும் பேசினலும் கேட்பதில்லை. அந்தச் சமயத்திலே என்ன செய்வது?" என்று சில பெற்ருேர்கள் கேட்கிருர்கள். 'வாயில் சொல்லிவிட்டுப் போகிற வர்களுக்கென்ன?

குழந்தையை வளர்த்துப் பார்த்தால் கஷ்டம் தெரியும். என் iT