பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிக்கலாமா ?

47

மகன் ராமு இருக்கிறானே, அவன் ஒவ்வொரு நாளைக்கு எதையாவது வேண்டுமென்று ஒரே கத்துக் கத்துவான். கீழே விழுந்து புரளுவான். இரண்டடி கொடுத்தால்தான் அடங்குவான். அவனே அடிக்காமல் என்ன செய்ய முடியும்?" என்று ஒரு தாய் என்னைக் கேட்டாள்.

ஆரம்பத்திலிருந்தே குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தால் இப்படி அடிக்க வேண்டி நேராது. அன்போடு வார்த்தை சொல்லுவதாலும், நம்முடைய நடத்தையின் உதாரணத்தாலுமே குழந்தையைச் சரியான வழியில் நடக்கும்படி செய்துவிடலாம். சில சமயங்களிலே குழந்தைக்கு அதன் நடத்தை சரியில்லே என்பதை நமது முகக் குறிப்பாலேயே உணர்த்திவிடலாம். சாதாரணமாகக் குழந்தை மற்றவர்களுக்கு விருப்பமில்லாததைச் செய்யாது. மற்றவர்கள் தனது செய்கைகளைப் பாராட்டிப் போற்ற வேண்டுமென்று குழந்தைக்கு ஆசை. பெற்றோர்கள் வெறுக்கிறார்கள் என்றால் அம்மாதிரியான காரிய்த்தை விலக்கிவிடக் குழந்தை முயலும். ஆனால், அதற்கு முதலிலிருந்தே பெற்றோர்கள் ஜாக்கிரதையாகக் குழந்தையை நல்ல முறையில் வளர்த்துவர வேண்டும். அடிப்பதனால் குழந்தையின் மறைமனத்திலே பல கோளாறுகள் ஏற்பட்டு அதன் பிற்கால வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று மனத் தத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் குழந்தையை அடிக்கவே கூடாது என்கிறார்கள் அவர்கள். ஒரு சிலர் எப்பொழுதாவது வேறு வழியொன்றும் தோன்றாத காலத்தில் குழந்தையை அடிக்கலாம் என்று ஒரு விதி விலக்கும் கூறுகிறார்கள். ஆனால், வெறும் கோபத்தாலோ வெறுப்பாலோ மட்டும் அடிக்கப்படாது என்றும், குழந்தையைத் திருத்துவதற்காக அதன் குற்றத்தை எடுத்துக்காட்டும் முறையில் அமைதியான மன நிலேயோடு அடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வரம்பு கட்டியிருக்கிறார்கள்.